பிரீத்தா ரெட்டி

இந்திய பெண் தொழில் முனைவோர்

பிரீத்தா ரெட்டி (Preetha Reddy) சென்னையில் அமைந்துள்ள அப்பலோ மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநராக உள்ளார்[1].

பிரீத்தா ரெட்டி
Preetha Reddy
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இசுடெல்லா மேரிக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம்
பணிதுணை தைலைவர், அப்போலோ மருத்துவமனை
உறவினர்கள்
பிரீத்தா ரெட்டியின் 2012ம் ஆண்டு படம்

கல்வி

தொகு

இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலை பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொதுநிர்வாகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.[2] வளர்ந்த பிறகு, பிரீத்தா தனது தந்தையின் மருத்துவமனைக்குச் சென்று அவருடன் பணிகளை பகிர்ந்து கொண்டார்.[3] கல்லூரியில் படிக்கும் போதே அவர் தனது கணவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியுமாறு இவரை அழைத்தார்.[4]

தொழில்

தொகு

பிரீத்தா, 1989 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநராக சேர்ந்தார். இவரது வழிகாட்டுதலின் கீழ், மருத்துவமனையின் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட்டு தரச் சான்றிதழ் பெறப்பட்டது.[3] 2012 இல், இவர் மெட்ரானிக் என்ற மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிரீத்தா தனது தந்தைக்குப் பிறகு அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவரானார்.[6]

குடும்பம்

தொகு

இவருக்கு சுனிதா ரெட்டி, சங்கீதா ரெட்டி மற்றும் சோபனா காமினேனி ஆகிய மூன்று சகோதரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைகளில் இயக்குநர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தக் குடும்பம் 34 சதவீத நிறுவனப் பங்குகளை கொண்டுள்ளனர்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. Executive Directors பரணிடப்பட்டது 2012-03-02 at the வந்தவழி இயந்திரம் அப்போலோ மருத்துவமனை website.
  2. "Executive Profile - P. Preetha Reddy". Businessweek. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
  3. 3.0 3.1 "The daughter who could take over the reins at Apollo". Business Standard. 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  4. Varadarajan, Nitya (12 July 2009). "Preetha Reddy: Healthcare queen". businesstoday.in. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  5. ARUNDHATI PARMAR (24 September 2012). "Medtronic turns eye to India with new board member and $6 million grant". பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  6. Jasleen Kaur Batra (2 July 2014). "Apollo Hospitals shuffles top management among Reddy sisters". vccircle.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  7. Gupta, Anish (5 November 2012). "How Preetha does it". fortuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.
  8. "Apollo Hospitals, a $2 billion health empire run by four sisters, makes a comeback". livemint.com. 21 November 2018. பார்க்கப்பட்ட நாள் 17 November 2019.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்தா_ரெட்டி&oldid=4157886" இலிருந்து மீள்விக்கப்பட்டது