இசுடெல்லா மேரிக் கல்லூரி

இசுடெல்லா மேரிக் கல்லூரி ஸ்டெல்லா மாரிஸ்)((Stella Maris College, மாற்று ஒலிப்பு:ஸ்டெல்லா மேரிக் கல்லூரி) தமிழ் நாட்டின் சென்னையில் அமைந்துள்ள பெண்களுக்கான கத்தோலிக்க உயர்கல்வி நிறுவனமாகும். இது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள தன்னாட்சி பெற்ற கல்லூரியாகும். இங்கு குறைந்தளவில் தங்குவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மரியாளின் பிரான்சிசுகன்(ஃப்ரான்சிஸ்கன்) மறைபரப்புச் சபையினால் (Society of the Franciscan Missionaries of Mary) நிர்வகிக்கப்படும் இந்தக் கல்லூரி ஒரு சிறுபான்மையினர் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கிறித்தவச் சூழலில், குறிப்பாக கத்தோலிக்கச் சமூகத்தினருக்கு பல்கலைக்கழக கல்வி வழங்கும் நோக்குடன் துவங்கப்பட்டது. கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் தர அங்கீகாரம் செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவினால் அமைக்கப்பட்ட அமைப்பான நாக் இக்கல்லூரிக்கு "ஏ" தரநிலை தந்துள்ளது.[1]

ஸ்டெல்லா மேரிக் கல்லூரி
வகைதன்னாட்சி
உருவாக்கம்1947
முதல்வர்முனைவர். சகோதரி ஜசிந்தா குவாட்ரசு
மாணவர்கள்3000
அமைவிடம், ,
13°2′49″N 80°15′13″E / 13.04694°N 80.25361°E / 13.04694; 80.25361
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்www.stellamariscollege.org
ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் உள்ள புனித பிரான்சிசு(ஃப்ரான்சிஸ்) கூடத்தின் வெளிமுகப்பு

வரலாறு

தொகு

ஆகத்து 15, 1947இல் சிறிய ஒருமாடிக் கட்டிடத்தில் 32 மாணவிகளுடன் இக்கல்லூரி துவங்கப்பட்டது; தற்போது இக்கல்லூரியில் பெரிய கட்டிடங்களில் 3000 மாணவிகள் பயில்கின்றனர். இக்கல்லூரி சென்னையிலுள்ள கதீட்ரல் சாலையில் அமைந்துள்ளது.

1987இல் இக்கல்லூரிக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது; 13 பட்டப் படிப்புகளும் 10 பட்ட மேற்படிப்புகளும் வழங்கப்படுகின்றன. எம்.பில், முனைவர் பட்டம், மற்றும் பட்டமேற்படிப்பு பட்டய படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. "ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு ஏ கிரேடு அங்கீகாரம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 6 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/stella-maris-turns-60-today/article1892294.ece
  3. http://www.business-standard.com/article/companies/the-sister-quartet-of-apollo-hospitals-114070200976_1.html
  4. Chowdury, Sunita Y (2010). "Poised on the edge". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2010-03-01.
  5. "Rama Ravi - Uncompromising Traditionalist". Chennai Online. Archived from the original on அக்டோபர் 6, 2013. பார்க்கப்பட்ட நாள் October 5, 2013.
  6. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  7. [2][தொடர்பிழந்த இணைப்பு]
  8. http://www.newindianexpress.com/cities/kochi/article550048.ece
  9. "Art is where the heart is". http://www.thehindu.com/features/friday-review. 

வெளி இணைப்புகள்

தொகு