ஜி. திலகவதி
கோ. திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குநர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
கோ. திலகவதி | |
---|---|
பிறப்பு | கோ. திலகவதி 1951 குமாரசாமிபேட்டை, தருமபுரி, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கலை முதுவர் |
பணி | காவல்துறை தலைமை இயக்குநர் |
பணியகம் | தமிழ்நாடு அரசு காவல் துறை |
பெற்றோர் | கோவிந்தசாமி |
வாழ்க்கைத் துணை | இளங்கோ(1) நாஞ்சில் குமரன்(2) |
பிள்ளைகள் | ஜாய்ஸ்ரேகா பிரபு திலக் திவ்யா |
பிறப்பு
தொகுதிலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் [1] அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; தாயார் அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.[2]
கல்வி
தொகுதிலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார்.[3] பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார்.[4] அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார்.[3] சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.[5]
பணி
தொகுதிலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP 1976 - )
தொகு- வேலூர்
- திருச்சி கூடுதல் இணை-ஆணையர்
காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
தொகு- வேலூர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர்
- சென்னை, துணை-ஆணையர்
- சென்னை கூடுதல் ஆணையர்
- சென்னை, புலனாய்வுத்துறை (CID)
- சென்னை, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு (Civil Supplies)
- சென்னை, குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை
- சென்னை, தலைமையிடத் துணை-ஆணையர்
- வனத்துறை
- வணிகவியல் துறை குற்றப்பிரிவு (Commercial Crime Investigation Wing)
- இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1993
காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG 1993-?)
தொகு- செங்கற்பட்டு (1993)[6]
காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)
தொகு- தலைமையிடக் காவல்துறைத் தலைவர்
- ஊர்க்காவல் படை (Home guard)
- இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1997
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP 2007[7] - 2010)
தொகுகாவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.[13]
காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.[14]
பிற பொறுப்புகள்
தொகு- மகளிர்நல ஆணைய உறுப்பினர்
- சாகித்ய அகாதமி உறுப்பினர்
மண வாழ்க்கை
தொகுமுதல் திருமணம்
தொகுதிலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தனது படிப்பிற்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[3]
இரண்டாவது திருமணம்
தொகுதிலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐதராபாத் நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.[1] இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார். பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார்.[1] பின்னர் மணவிலக்குப் பெற்றார்.[15]
படைப்புகள்
தொகுதிலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
கட்டுரைகள்
தொகு- முடிவெடு
- வேர்கள் விழுதுகள்
- சமதர்மப் பெண்ணியம்
- மானுட மகத்துவங்கள்
சிறுகதைகள்
தொகுதிலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது.[5]
- தேயுமோ சூரியன்
- அரசிகள் அழுவதில்லை
நாவல்கள்
தொகு- இனிமேல் விடியும் (மாலைமதி; 2-3-1989; மதி: 15 மாலை:18)
- உனக்காகவா நான்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
- ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
- கண்திறந்திட வேண்டும்; 1996 கலைமகளில் வெளிவந்த தொடர்
- கல்மரம் (சாகித்ய அகாதெமி விருது பெற்றது); அம்ருதா பதிப்பகம், சென்னை; 2005.
- கனவைச் சூடிய நட்சத்திரம்; 2001
- கைக்குள் வானம்
- சொப்பன பூமியில்; அம்ருதா பதிப்பகம், சென்னை; மு.பதி. 1998;இ.பதி 1998.
- தமிழ்க்கொடியின் காதல்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
- தீக்குக் கனல் தந்த தேவி
- திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு); புதுமைப்பித்தன் பதிப்பகம்; 2004
- நேசத்துணை; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
- பத்தினிப்பெண் (1983ஆம் ஆண்டில் திரைப்படமாக உருவானது)[5]
கவிதை
தொகு- அலை புரளும் கரையோரம்
வானொலி உரைகள்
தொகு- காலந்தோறும் அறம்
தொகுத்தவை
தொகு- தொப்புள்கொடி (சிறுகதைகள்)
- மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)
மொழிபெயர்ப்பு
தொகு- அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்காரியா
- இத்வா முண்டாவுக்கு வெற்றி - மகாசுவேதா தேவி (நேஷனல் புக் டிரஸ்ட்)
- உதிரும் இலைகளின் ஓசை (உருது சிறுகதைகள்) - குர்ரத்துலைன் ஹைதர் (சாகித்திய அகாதெமி)
- போலுவும் கோலுவும் - பங்கஜ் பிஷ்ட் (நேஷனல் புக் டிரஸ்ட்)
ஆய்வுகள்
தொகுதிலகவதியின் படைப்புகளைச் சிலர் இளம்முனைவர் பட்டத்திற்கும் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வுசெய்துள்ளனர். அவற்றுள் சில:
- திலகவதி புதினங்களில் பெண்கள் (முனைவர் பட்ட ஆய்வேடு); இராசு, நி; சி.பி.எம்.கல்லூரி, கோயம்புத்தூர்; 1998
- திலகவதி நாவல்களில் பாத்திரப்படைப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு), பியூலஜா தி க; 2017; மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
- திலகவதி நாவல்கள் ஒரு பெண்ணியப் பார்வை (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); இ. உமாமகேஸ்வரி; புதுவைப் பல்கலைக்கழகம்; 2000.[16]
- திலகவதி நாவல்களில் பெண் சித்திரிப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு); எஸ். ஆஞ்சல் ஜெயலட் ராணி; அருள் பதிப்பகம், சென்னை;
- திலகவதியின் நாவல்களில் சமுதாயக் கருத்துகள் (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); டோலி; ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, நாகர்கோவில்.
- திலகவதியின் 'தேவை ஒரு தேவதைக்கதை'யில் சமுதாயச் சிந்தனைகள் (கலைமுதுவர் பட்ட ஆய்வேடு); தீபலட்சுமி; தெ.தி.இந்துகல்லூரி, நாகர்கோவில்.
- திலகவதி நாவல்களில் சமூதாயச் சிக்கல்களும் தீர்வுகளும்; கோ. தனலட்சுமி; ஸ்ரீ. கா. சு. சு. கலைக் கல்லூரி, திருப்பனந்தாள்.
விருதுகள்
தொகு- சாகித்ய அகாதமி விருது
- தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2020)[17]
அரசியல்
தொகுதிலகவதி 2013 மார்ச் 13ஆம் நாள் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 http://indiankanoon.org/doc/1834716/
- ↑ திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.48
- ↑ 3.0 3.1 3.2 திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.49
- ↑ இராசாராம், க. சாமானியனின் கதை, சூனியர் விகடன்
- ↑ 5.0 5.1 5.2 https://aptinfo.in/profile-and-life-history-of-g-thilakavathi-ips/
- ↑ "New DIG for Chengai range". The Indian Express: p. 5. 5 November 1993.
- ↑ "Pudukottai litterateurs honour writer". The Hindu. 21 April 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Pudukottai-litterateurs-honour-writer/article14752664.ece. பார்த்த நாள்: 14 June 2010.
- ↑ https://www.savukkuonline.com/7413/
- ↑ சாராய சாவு எதிரொலி: மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி திலகவதி மாற்றம்!
- ↑ http://www.tneow.gov.in/eow/ADGP_joining.html
- ↑ "Thilakavathi promoted". The Hindu. 17 June 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Thilakavathi-promoted/article16249509.ece. பார்த்த நாள்: 5 March 2018.
- ↑ http://tamil.oneindia.in/news/2010/06/17/tamilnadu-police-thilagavathy-dgp.html
- ↑ இவருக்கு முன்னர் இப்பதவியை லத்திகா சரண் என்பவர் அடைந்திருக்கிறார்.
- ↑ http://tamil.oneindia.in/news/2011/04/01/thilagavathi-ips-retires-aid0091.html
- ↑ திலகவதி ஐ.பி.எஸ்., மனது விட்டு: எனக்குள் நான்..., அவள் விகடன், 1998 நவம்பர் 1-14, பக்.50-51
- ↑ https://www.nlb.gov.sg/biblio/13065928
- ↑ "தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் திருநாள், தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". தினமணி. https://www.dailythanthi.com/News/State/2021/01/14101434/Announcement-of-Thiruvalluvar-Thirunal-Tamil-New-Year.vpf. பார்த்த நாள்: 15 June 2021.
- ↑ https://www.youtube.com/watch?v=EexNBRAb0zM
வெளி இணைப்புகள்
தொகு- திலவதியின் நாவல்களைப் பற்றி திசைகள் இணைய இதழில் வந்த கட்டுரை
- தமிழோவியம் இணைய இதழில், திலகவதியின் "உனக்காகவா நான்" என்ற நாவலில் இருந்து சில பத்திகள்
- டீக்கடை வலைப்பதிவில், திலகவதியின் கைக்குள் வானம் என்ற நாவலில் இருந்து சில வரிகள் பரணிடப்பட்டது 2006-02-21 at the வந்தவழி இயந்திரம்