சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் ஆலயம்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்
(சங்குவேலி சிவஞான பிள்ளையார் ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


சங்குவேலி சிவஞானப் பிள்ளையார் ஆலயம்

ஆலயத்தின் முகப்புத் தோற்றம்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள சங்குவேலி கிராமத்தில் உடுவில் - மானிப்பாய் வீதியில் அமைந்துள்ளது.ஈழத்து ஆலயங்கள் [1]


சங்குவேலி கிராம மக்கள் ஆதியிலுள்ள விநாயகர் ஆலயத்தை வழிபட்டு வந்துள்ளனர். இவ்வாலயம் சுண்ணாம்பும் காட்டுக்கல்லும் கொண்டு கருவறை மட்டும் கொண்ட ஏகதள விமானத்தைக் கொண்ட ஆலயமாகக் காணப்பட்டது எனக் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தை கட்டியவர் யாரென்பது அறியப்படவில்லை எனினும் இக்கோயில் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளில் ஒருவரான செகராசசேகர மன்னனால் கட்டுவிக்கப்பட்டது என்பது கர்ணபரம்பரைக்கதையாக உள்ளது. இவ்வாதி விநாயகர் ஆலயமானது இன்றைக்கு 300ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக காணப்படுகின்றது.

இவ்வாலயம் திருமஞ்சனக்கிணற்றுடன் அமைந்து காணப்படுகிறது. இதன் மூல விநாயகர் ஒரு அடி ஆறு அங்குலம் கொண்ட அழகிய தோற்றத்துடன் காணப்படுகின்றது.


இவ்வாலயத்தை பராமரித்து வந்தவர்கள் காசி உடையார் குடும்பம் என்று கூறப்படுகின்றது. ஒன்பது பாய்மரக் கப்பல்களை சொந்தமாக வைத்து வாணிபம் செய்தவரும், தனவந்தரும் பிரபலவர்த்தகருமான மட்டக்களப்பு திரு. காசிநாதர் வைத்தியலிங்கம்பிள்ளை அவர்களால் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.

ஆலய வரலாறு

தொகு

இவ்வாறு சிறு சிறு பணிகளைச் செய்து கோயிலின் கட்டிடத்திலும் திருப்பணிகளைச் செய்ய நினைத்தார் கிட்டத்தட்ட 1905ம் ஆண்டு பழைய ஆலயத்தை புனருத்தாணம் கருதி பாலஸ்தாபனம் செய்தார். [1] ஆகம விதிகளுக்கு அமைவாக கருவறை அர்த்த மண்டபம், மகாமண்டபம், தரிசனமண்டபம் என்பவற்றை வெள்ளை வைரக்கல்லால் அமைத்து ஸ்தம்பமண்டபம், வசந்தமண்டபம் என்பவற்றை தூண்களாலும் அமைத்து யாகசாலை களஞ்சிய அ[றை வாகனசாலை பரிவாரத்தெய்வம் என்பனவற்றையும் அமைத்துக் கருவறையின் விமானம் இரண்டு தளங்களைக் கொண்டதாகவும் சிறப்பாக அமைத்து 1918ஆம் ஆண்டு சாலிவாதன வருடம் ஆவணி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதாசிவக் குருக்கள் தலைமையில் முதன் முதலாக கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார்.

ஆலயத்தின் மூல விநாயகர்

இதற்கு சான்றாக ஆலய தரிசன மண்டப கற்சாசனம் காணப்படுகின்றது. இவ்வாலயத்தைக்கட்டிய ஸ்தபதியாக தென்னிந்தியாவைச்சேர்ந்த வீரபாகு என்பவர் காணப்படுகின்றார். மேலும் இவ்வாலய மண்டபங்களின் கூரைக்கான தீராந்திகரைகளையும் கதவுக்கான தேக்கு மரங்களையும் இந்தியா, பர்மா நாடுகளிலிருந்து ஒன்பது பாய்மரக்கப்பல் மூலம் வரவழைத்தார். திரு.க.வைத்திலிங்கப்பிள்ளை 1918 இல் இவ் கோயிற் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்ற போது மூலவிக்கிரகத்தைக் கருவறையில் ஸ்தாபித்ததும் பழைய விநாயக விக்கிரகத்தை இவ்வாலயத்தின் பக்கத்திலுள்ள அம்பலவானர் விதாணையின் வெறுங்காணியில் வைத்தார்கள் என்றும் அதன் பின்பு வைத்திலிங்கம் குடும்பம் பல்வேறு துன்பங்களுக்கும் நோய்களுக்கும் ஆளாகிய போதும் இக்குடும்பத்தினர் மாறிமாறி இறக்கவும் தொடங்கினார்கள்.

அத்தோடு இவர்களின் பாய்மரக்கப்பல்களில் சிலவும் கடலில் மூழ்கியதாகக் கூறப்படுகின்றது. எனவே இதற்கான காரணத்தை அவ் ஊர்ப் பெரியார்கள் அறியமுற்பட்ட வேளையில் பழமைவாய்ந்த பிள்ளையாரை வழிபாடு செய்யாது வெறும் தரையில் வைத்தமையே என்பதனை உணர்ந்து மீண்டும் அப்பிள்ளையாரை எழுந்தருளித் தெங்வங்கள் அமர்ந்திருக்கும் மகாமண்டபத்தில் தெற்குப்புறத்தில் வைத்து வணங்கத் தொடங்கினார்கள். எனறும் அதன் பின்பே மீண்டும் முன்பிருந்த செல்வ நிலையைப் பெற்றதோடு நோய்துன்பங்களிலிருந்தும் விடுபட்டார்கள் என மக்கள் கூறுகின்றார்கள். இன்றும் முதலில் இப்பழைய விநாயகருக்குப் பூஜை செய்த பிறகுதான் மூலஸ்தானப்பிள்ளையாருக்கு பூஜை நடைபெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பூஜைகள் முடிந்தபிறகு குருக்கள் அப்பிள்ளையாருக்கு முன்விழுந்து வணங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு இப்பிள்ளையார் மகத்துவம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

ஆலயத்தின் அமைவு

தொகு

சங்குவேலி சிவஞானப் பிள்ளையாரின் ஆலயமானது ஆகமம் கூறும் விதிமுறைகளைப்பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகம் கிழக்குநோக்கிய வாயிலாக உடையது அடுத்து அர்த்த மண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபம், ஸ்தம்பமண்டபம், வசந்தமண்டபம் என்பவற்றைக்கொண்டும் நுழைவாயிலில் கோபுரத்துக்கான அடித்தளம் காணப்படுவதுடன் முகமண்டபமும் அமைந்துள்ளது. சுற்றுப்பரிவாரத் தெய்வங்களாக உள்சுற்றின் வடக்குப்பக்கத்தில் ஸ்தம்பமண்டபத்திற்கு அருகில் நவக்கிரகங்கள் நான்குபக்க வாயிலாக அமைக்கப்பட்டுள்ளன.[1] கிழக்கே மணிக்கோபுரத்திற்கு அருகில் மேற்கு நோக்கியவாறு வைரவர் ஆலயமும், மூலஸ்தானத்திற்கு வடக்குப்புறம் சண்டேஷ்வரர் ஆலயமும் எழுந்தருளிமண்டபத்திற்கு அருகில் நடராஜர் சபையும் சிய ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளன. திருமஞ்சணக்கிணறு சண்டேஸ்வரர் ஆலயத்திற்கு கிழக்குப்பக்கமாகவும் மாகாமண்டபத்திற்குப்பின்புறமாகவும் அமைந்துள்ளது. மகாமண்டபம் நடுவிலே நான்கு தூண்களும் வடக்குப்புறத்தில் கருவறையும் கிழக்கும் தெற்கு நோக்கியவாறு வாயில்களையுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. கருறையின் பிரமாணம் ஒன்பது அடி ஒன்பது அங்குலத்தில் அமைந்துள்ளது. ஸ்தம்பமண்டபம் நான்கு தூண்களைக்கொண்ட வில் அலங்கார அமைப்பும் சுவர்களும் ஓட்டினால் வேயப்பட்ட கூரையுமாக இம்மண்டபத்தில் 21அடி உயரமான ஸ்தம்பம் அமைக்கப்பட்டு செப்பினால் அங்கி பொருத்தப்பட்டுள்ளது.

21அடி உயரமான கொடித்தம்பம்


வசந்த மண்டபம் கிழக்கு நோக்கியவாறு 12தூண்களும் உதைதூண்களும் வில்லறையையும் கொண்டதாகவும் தெற்கு நோக்கி எட்டு தூண்கள் வட்டமானதாகவும் உள்சுற்று முழுவதும் வட்டமான தூண்களை உடையதாகவும் மண்டபத்தின் மேற்கூரையும் உள்சுற்றுக்கூரையும் ஓட்டினால் வேயப்பட்டுள்ளன. ஆலயத்தின் உள்சுற்றின் தென்கிழக்கு மூலையில் (அக்கினிக்கு) ஆலயத்திற்குரிய பாகசாலையும் அதன் வடக்குப்புறத்தில் பாகசாலைக்குரிய நீர்க்கிணறும் பாகசாலையை அடுத்து வடக்கு நோக்கிய வாயிலையுடைய களஞ்சிய அறையும் அதனையடுத்து கணக்காளர் அறையும் அடுத்து கோயிலின் தெற்கு நுழைவாயிலின் மேற்கு புறத்தில் வாகனசாலையும் அமைந்துள்ளன. இவையாவும் நன்கு சீர்செய்யப்பட்டு கற்களினாலும், சுண்ணாமட்பினாலும் அமைக்கப்பட்டுள்ளன. கருவறையின் கலர்கள் வெள்ளைவைரக்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன .

”கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்ற கூற்றுக்கமையாக இக்கோவிலின் கிழக்கு நோக்கிய பெருவாயிலில் மகாகோபுரத்திற்கான அடித்தளம் உள்வெளி 17அடி அகலமும் 25அடி உயரமும் கொண்ட நுழைவாயில் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சூழ்நிலைகளால் மேற்தளங்கள் கட்டப்படாதிருக்கின்றமையும் இங்கு அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆயினும் அடித்தளத்தின் ேமற்பகுதியில் புரணகலசம் வைக்கப்படிருந்தது .ஆலயமமைந்த நூற்றி நான்காவது ஆண்டில் பஞ்சதள இராஜகோபுரம் அமையப்பெற்று 31.08.2022 ஆவணி சதுர்தி நன்னாளில் கும்பாபிசேகம் இடம்பெற்றது அதனை அடுத்து அவ்வாலய கண்டாமணிக்குரிய கோபுரம் மிகவும் அழகுறவும் ஏககலச ஸ்துபியுடனும் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் அமைப்பு யாவும் சித்தங்கேணி மகா கணபதிப்பிள்ளையார் ஆலய அமைப்பை போன்றே காணப்படுகின்றது. மேலும் இவ்வாலயத்தின் உள்சுற்றின் எல்லைகள் யாவும் காட்டுக்கல்லால் ஆன மதிலாக

வன்னிமரம்

அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய நுழைவாயிலின் முன்புறமாக சிறிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதே பொன்று கிழக்கு பெருவாயிலிலும் 30அடி அகலமும் 10அடி நீலமும் கொண்ட முகமண்டபம் துன்களால் அமைக்கப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டு மரச்சலாகைகளினால் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.


இவ்வாலயத்தின் உற்சுற்றின் வடமேற்கு மூளையில் வடக்குப்புறத்தில் தலவிருட்சமான வன்னிமரம் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரமாக காட்சி தருவதும் குறிப்பிடத்தக்கது இவ்வாலய பிரதம சிவாசாரியாரின் இல்லம் ஆலய வெளி வீதியின் தென்மேற்கு மூலையில் வடக்கு நேக்கியவாறு அமைந்துள்ளது. திரு.வைத்திலிங்கம்பிள்ளை அவர்களினாலர் கட்டப்பட்ட பாடசாலை ஆலயத்திற்கு சமீபமாக உள்ளது அத்துடன் துணி நெசவு செய்யும் நெசவுசாலையும் இவ்வாலயத்தின் தீர்த்தக் காணியோடு இணைந்ததாகக் காணப்படுகின்றது.

கேணி அமைவு

தொகு

கோயிலுக்கு குளம் அவசியம் அதுமட்டுமன்றி கோயில் அடியவர்களுக்கும் பிற உயிரினங்களிற்கும் நீர் அவசியம் என உணர்ந்து ஆதிக் கோயிலுக்கு தென்புறமாக வால்கேணியையும் ஆவுரஞ்சுக்கல்லையும் அமைத்தார்.[1] இக்கேணியாகது 1894ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகக் காணப்படுகின்றது. இதற்குச் சான்றாக இப்போதுள்ள சிந்து தீர்த்தக்கேணிச் சுவரில் முன்னைய கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். அதில் வைத்தியலிங்கம் பிள்ளையின் மனைவி நினைவு உபயம் என பொறிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் அமைவிடம்

தொகு

வெளிக்சுற்றின் கிழக்கு வெளிப்புறத்தில் கோயிலின் ஈசான தெற்கில் தேர்த்தரிப்பிடமும் மண்டபமும் படிகளும் சீமெந்தினால் அழகாக அமைக்கப்பட்டுள்ளன கோயில் தெற்கு வீதியின் வெளிப்புறமாக அன்னதான மண்டபமாகிய ”அன்னபுரணி” மண்டபம் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது வீதியின் தெற்குப்பக்கமாக சிந்துநதித் தீர்த்தம் ஒருபக்கப்படிவுடன் வடக்குப்பக்கமாக 15படிகள் கொண்டதாக சற்சதுர அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.[1]

 
ஆலய அமைவிடம்

உசாத்துணை

தொகு
  • ஈழத்து ஆலயங்கள் (யாழ் மாவட்ட திருத்தலங்கள் - பாகம் - 01) நூலிலிருந்து ”வை.சோமசேகரன்” அவர்களது கட்டுரை.
  • அகில இலங்கை இந்து மாமன்றத்தின் நூலிலிருந்து.
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 யாழ் மாவட்ட திருத்தலங்கள் - பாகம் - 01 நூலிலிருந்து ”வை.சோமசேகரன்” அவர்களது கட்டுரை.