சங்க இலக்கியங்களில் தாவரங்கள் (நூல்)

சங்க இலக்கியங்களில் தாவரங்கள் என்பது 1987 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வு நூல் ஆகும். இந்த நூலினை தொல் அறிவியல் துறை ஆய்வாளர் முனைவர் கு. சீ. நிவாசன் எழுதியுள்ளார். இந்த நூல் "சங்கத் தமிழ் இலக்கியங்களில் 210 மரம், செடி, கொடிகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவை 150 தாவரங்களையே குறிக்கும்" என்று கூறி இவற்றைப் பற்றி விரிவாக ஆய்கிறது.[1]

சங்க இலக்கியங்களில் தாவரங்கள்
நூல் பெயர்:சங்க இலக்கியங்களில் தாவரங்கள்
ஆசிரியர்(கள்):முனைவர் கு. சீ. நிவாசன்
வகை:தாவரவியல்
துறை:தமிழர் தாவரவியல்
காலம்:சங்க காலம்
இடம்:இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:810
பதிப்பகர்:தமிழ்ப் பல்கலைக்கழகம்
பதிப்பு:1987

இந்த நூலைப் பற்றி நாஞ்சில் நாடன் எழுதிய மதிப்புரையில் "தாவரங்கள் மேல் ஈடுபாடு உடையவர்கள், கிராமங்களில் பிறந்த வளர்ந்தவர், இயற்கை மீது ஆரவம் கொண்டவர் பலருக்கும் இந்த நூல் ஒரு புதையல்" என்கிறார்.[1]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 நாஞ்சில் நாடன். (2011). பனுவல் போற்றுதும். திருச்சிராப்பள்ளி: தமிழினி.