சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்

சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூல், பி. எல். சாமி (பி. லூர்துசாமி) என்பவர் எழுதி, 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு் மாதம், திருநெல்வேலி தென்னிந்திய சைவசைத்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இதன் முதற்பதிப்பு டிசம்பர் மாதம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. முதல்பதிப்பின் தலைப்பு சங்க இலக்கியத்தில் நிலைத்திணை விளக்கம் என்று இருந்தது. இந்நூலின் ஆசிரியர் சங்க இலக்கியத்தில் செடிகொடிகளைப் பற்றி கூறப்பட்டுள்ள செய்திகளைத் திரட்டி, அவைபற்றிய ஆசிரியரின் தன்னறிவையும், தற்கால மக்களின் நேரடியான அறிவையும், ஆங்கில மற்றும் பிற மொழி நூல்களில் கூறியுள்ள குறிப்புகளையும் ஒப்பிட்டுத் தொகுத்து இந்நூலை ஆகியுள்ளார். செடிகொடிகளின் தோற்றம், இலை, பூ, காய், கனி விதைகள், வாழிடங்கள், நில-நீர்ச் சூழல்கள் பற்றிய அரிய செய்திகள் இந்நூலில் உள்ளன. செடிகொடிகளின் தமிழ்ப்பெயர்களும், அவற்றிற்கான ஆங்கிலப் பெயரும், அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்களும் தந்துள்ளார்.

சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம்
நூல் பெயர்:சங்க இலக்கியத்தில்
செடிகொடி விளக்கம்
ஆசிரியர்(கள்):பி. எல். சாமி
(பி.லூர்துசாமி)
வகை:அறிவியல் (பொது)
துறை:அறிவியல்,
செடியியல் இலக்கியம்
காலம்:1982
இடம்:சென்னை, இந்தியா
மொழி:தமிழ்
பக்கங்கள்:184
பதிப்பகர்:திருநெல்வேலி,
தென்னிந்திய
சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்
பதிப்பு:ஆகஸ்டு 1982;
(மறு பதிப்பு)
டிசம்பர் 1967
(முதற்பதிப்பு)
ஆக்க அனுமதி:பி. லூர்துசாமி

இந்நூலில் மொத்தம் 21தலைப்புகளில் உள்பிரிவுகள் உள்ளன. இதுவே தமிழில் செடிகொடிகளைப்பற்றி, சங்க இலக்கியச் செய்திகளையும் தற்கால செடியியல் கருத்துகளையும் சேர்த்துத் தரும் முதல் நூல். இந்நூலில் கடைசி தலைப்பாக தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள செடி நோய்கள் பற்றியும் இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்நூலில் உள்ள தலைப்புகள்:

  1. சங்க இலக்கியத்தில் செடிநூற் செய்திகள்
  2. குறிஞ்சி
  3. மருதம்
  4. முல்லை, நெய்தல், பாலை
  5. காந்தள்
  6. பாம்புச் செடி
  7. நரந்தம்
  8. முருக்கும் கவிரும்
  9. கொன்றை
  10. பாதிரி
  11. புன்னை
  12. முசுக்கட்டையும் அடும்பும்
  13. இலவும் கோங்கும்
  14. இலுப்பை
  15. தாழை
  16. குருகு, குரவு, குருந்து
  17. நெல்லி
  18. கருவிளம், கூவிளம்
  19. தில்லையும் குல்லையும்
  20. தடவும் பிடவும்
  21. தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள செடி நோய்கள்