சஞ்சமன் லிம்பூ

இந்திய அரசியல்வாதி

சஞ்சமன் லிம்பூ (Sanchaman Limboo) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று மேற்கு சிக்கிம் மாவட்டம் இயீ யாங்தாங்கு நகரத்தில் இவர் பிறந்தார். சிக்கிம் மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராக பணியில் இருந்தார்.[1] சிக்கிமில் இவர் 179 நாட்கள் முதல்வராக இருந்தார். இவரது காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மையச் சட்டம் சிக்கிமில் அமல்படுத்தப்பட்டது. [2]

சஞ்சமன் லிம்பூ
Sanchaman Limboo
சிக்கிம் 4ஆவது முதலமைச்சர்
பதவியில்
17 சூன் 1994 – 12 திசம்பர் 1994
ஆளுநர்இராதாகிருசுண அரிராம் தகிலியானி
பி. சிவசங்கர்
முன்னையவர்நர் பகதூர் பண்டாரி
பின்னவர்பவன் குமார் சாம்லிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1947-01-15)15 சனவரி 1947
இயீ யாங்தாங்கு, மேற்கு சிக்கிம் மாவட்டம், சிக்கிம் இராச்சியம்
இறப்பு8 நவம்பர் 2020(2020-11-08) (அகவை 73)
கேங்டாக், சிக்கிம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிக்கிம் சங்கராம் பரிசத்து
துணைவர்நிர்மலா சுப்பா
வாழிடம்(s)கேங்டாக், சிக்கிம், இந்தியா

சிக்கிம் மாநில அரசியலில் சிக்கிம் சங்கராம் பரிசத்து கட்சியின் உறுப்பினராக இயங்கினார். நிர்மலா சுப்பா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சஞ்சமன் லிம்பூ 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று தனது 73ஆவது வயதில் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த பின்னர் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "List of Sikkim Chief Ministers". www.mapsofindia.com. 2011-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-04-22.
  2. "Former CM Of Sikkim Sanchaman Limboo Passes Away at 73". https://www.voiceofsikkim.com/former-cm-of-sikkim-sanchaman-limboo-passes-away-at-73/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சமன்_லிம்பூ&oldid=3838771" இலிருந்து மீள்விக்கப்பட்டது