20, அசோகா சாலை
இந்தியாவின் தலைநகரம் புதுதில்லியில் உள்ள ஒரு கட்டிடம்
(சஞ்சார் பவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
20, அசோகா சாலை (20, Ashoka Road) என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் இந்தியாவின் தலைநகரம் புது தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக சஞ்சார் பவன் என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். [1] இந்தக் கட்டிடம் இந்தியத் தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா ஒருவரே வடிவமைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.
20, அசோகா சாலை 20, Ashoka Road | |
---|---|
புது தில்லியில் 20, அசோகா சாலை அமைவிடம் | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | புது தில்லி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 28°37′18″N 77°12′50″E / 28.62167°N 77.21389°E |
கட்டுவித்தவர் | இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பிரோசு குதியன்வாலா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Department of Telecommunication - Basic Services". Department of Telecommunication, Ministry of Communication & Information Technology. Archived from the original on 4 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 19 சனவரி 2012.