சடாரி
சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. [1]
சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார். வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.[2]
வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ஸ்ரீசடாரி பரணிடப்பட்டது 2016-02-02 at the வந்தவழி இயந்திரம்