சண்டாளன்
சண்டாளன் (Chandala) (சமக்கிருதம்: चण्डाल) என்ற சமசுகிருத சொல்லிற்கு சுடுகாட்டில் பிணஞ்சுடுபவரைக் குறிக்கும். இவர்கள் சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். தமிழில் சுடுகாட்டில் பணிபுரிபவர்களை வெட்டியான் என்று அழைப்பர். வங்காளத்தில் இம்மக்களை நாமசூத்திரர் என அழைப்பர்.

இவர்கள் நால் வகை வர்ணத்தவர்களுக்குள் அப்பாற்றப்பட்ட பஞ்சமர் (அவர்ணத்தவர்) என்றும் அழைக்கப்படுவர்.[1]கடும் குற்றம் புரிந்தோர்களுக்கு, நீதிமன்றங்கள் விதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றுபவர்களாக இச்சமூகத்தவர் உள்ளனர்.
இவர்களை இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பட்டியல் சமூகத்தவரில் சேர்த்துள்ளது.[2][3]
தொன்ம வரலாறு
தொகுமனுதரும சாத்திரத்தின்படி, வருணக் கலப்பு ஜாதியில் தோன்றும் பிரதிலோம சாதிகளில் கடைக்கோடி பிரிவினரே சண்டாளர்கள் ஆவார். அதாவது அந்தணர் அல்லாத இதர மூவகை வருணத் தந்தைகளுக்கு, அந்தணப் பெண்கள் மூலம் பிறந்தவர்களைச் சண்டாளர் எனும் பஞ்சம சாதியில் வைக்கப்படுவர்.[சான்று தேவை]
இதிகாசத்தில்
தொகுஇராமாயணம் இதிகாசத்தில் இச்வாகு குல மன்னர் அரிச்சந்திரன் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
பாகியான் குறிப்புகள்
தொகு4-5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த பௌத்த அறிஞர் பாகியான் தனது பயணக்குறிப்பில் சண்டாள மக்களின் நிலையைக் குறித்துள்ளார்.[4][5]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Viswanath, Rupa (2014). The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India. Columbia University Press. p. 268. ISBN 978-0-23116-306-4.
Panchama means "of the fifth," and therefore outside the fourfold classical system of caste, or varna. Avarna, similarly means those outside the varna system. Chandala is a term referring to "unclean" castes and is used as a vlur in many parts of India.
- ↑ Chandrashekhar Bhat (1984). Ethnicity and Mobility. Concept publishing. pp. 2–3.
- ↑ S. M. Michael (1999). Untouchable: Dalits in Modern India. Lynne Rienner Publishers. pp. 3–4. ISBN 9781555876975.
- ↑ Faxian (1886). "On To Mathura Or Muttra. Condition And Customs Of Central India; Of The Monks, Viharas, And Monasteries.". A Record of Buddhistic Kingdoms. Translated by Legge, James.
- ↑ Bodhipaksa (2016). Vegetarianism. Windhorse. ISBN 978-19093-14-740.
மேலும் படிக்க
தொகு- Anna Dallapiccola, Dictionary of Hindu Lore and Legend, Thames & Hudson, 2004 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1