சண்டிகர் திரைப்பட நகரம்
சண்டிகர் திரைப்பட நகரம் (Chandigarh film city) உருவாக்குவதற்கான திட்டம் 2007 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது. பர்சுவ்நாத் உருவாக்குநர்கள் நிறுவனம் சத்தீசு கௌசிக்கை தொழில்நுட்ப ஆலோசகராக முன்னிறுத்தி சண்டிகர் நகரில் திரைப்பட நகரத்தை உருவாக்க திட்டமிட்டது. [1][2] இதற்காக பஞ்சாப்மாநிலச் சுற்றுலாத் துறையும் பர்சுவ்நாத் உருவாக்குநர்கள் நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி, உருவாக்குநர்கள் நிறுவனத்திற்கு 99 வருட குத்தகை காலத்திற்கு 191 கோடி ரூபாயை பஞ்சாப் அரசு செலுத்த வேண்டும். [1][2] திரைப்பட நகரத்தில் ஒரு திரைப்பட படப்பிடிப்புக்கூடம், பல்லூடகப் பூங்கா, பல்லூடகப் பொழுதுபோக்கு மையம், ஒரு பல்லூடகக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்[1][2] ஆகியவை இடம்பெற வேண்டும். திரைப்பட நகரம் பர்சுவ்நாத் திரைப்பட நகரம் என்று பெயரால் அழைக்கப்படவேண்டும். [3]
பர்சுவ்நாத் மற்றும் பஞ்சாப் மாநில அரசாங்கத்திற்கு இடையில் கருத்து மோதல்கள் தோன்றின. நீதிமன்றங்கள் மூலம் இருவரும் போட்டியிட்டனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஒப்பத்தம் இரத்து செய்யப்பட்டது. [4]
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நம்பிக்கைகள் புதுப்பிக்கப்பட்டன, திரைப்பட நகரத்தை தானே நேரடியாக உருவாக்கும் திட்டங்களை பஞ்சாப் மாநில அரசு அறிவித்தது. [5]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Chandigarh to have its own film city". www.rediff.com. Archived from the original on 2017-09-19. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- ↑ 2.0 2.1 2.2 "Parsvnath to develop modern Multimedia-cum-Film City centre at Chandigarh". parsvnath (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-01-11. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- ↑ "Punjab to set up film city". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-27.
- ↑ Kaur, Harleen (14 December 2019). "Now Punjab Government Plans To Set Up Film City Near Chandigarh". Ghaint Punjab. https://www.ghaintpunjab.com/ghaintpunjab/Article/32351/punjab-government-film-city-near-chandigarh. பார்த்த நாள்: 11 January 2020.
- ↑ "Film city near Chandigarh soon" (in en). The Pioneer. 14 December 2019. https://www.dailypioneer.com/2019/state-editions/film-city-near-chandigarh-soon.html. பார்த்த நாள்: 11 January 2020.