சண்முகா நதி அணை

சண்முகா நதி அணை (Shanmuganathi Dam) என்பது தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பாயும் சண்முகா நதியின் குறுக்கே இராயப்பன் பட்டி என்னும் ஊருக்கு அருகே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணை தேனிமாவட்டத்தின் பூசாரிக்கவுண்டன் பட்டி, சுக்கங்கால்பட்டி, ஆப்பிபட்டி, வெள்ளையம்மாள் புரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை போன்ற ஊர்களின் [1] வரண்ட பகுதிகளின் பாசணத் தேவையை நிறைவு செய்கிறது. மேலும் இந்த அணை இயற்கை அழகு நிறைந்த மேகமலையின் அடிவாரத்தில் மலையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இராயப்பன்பட்டி உத்தமபாளையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]

சண்முகா நதி அணை

மேற்கோள்கள்தொகு

  1. ".1.10 கோடியில் சண்முகா நதி அணை பராமரிப்பு பணிகள்". தினமலர் (2016 சூலை 9). பார்த்த நாள் 4 ஆகத்து 2016.
  2. "சண்முகா நதி அணைக்கட்டு, தேனி". நேடிவ் பிளானெட். பார்த்த நாள் 4 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சண்முகா_நதி_அணை&oldid=2751280" இருந்து மீள்விக்கப்பட்டது