சதனம் வாசுதேவன்

இந்திய செண்டை இசைக் கலைஞர்

சதனம் வாசுதேவன் (Sadanam Vasudevan) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாள கலைஞர் ஆவார். பாரம்பரிய கேரள இசைக் கருவியான செண்டை என்ற தாள இசைக்கருவியில் இவர் தாளம் வாசிக்கிறார். தயம்பகா மற்றும் கதகளி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வாசுதேவன் நன்கு அறியப்பட்ட கலைஞராக உள்ளார். [1] 2013 ஆம் ஆண்டு கேரள அரசிடமிருந்து பல்லவூர் அப்பு மாரர் விருதைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமி உறுப்பினர் தகுதியையும் பெற்றார்.[2]

பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டத்தில் இருந்த அங்காடிபுரத்தில் கரீம்நாய்க்கல் மீனாட்சி அம்மாவுக்கும் சேனங்கரா கோபாலன் நாயருக்கும் மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார். சதனம் வாசுதேவன், ஏழாவது வயதில் செண்டை இசைக்கருவியை கற்கத் தொடங்கினார். [1] பின்னர் பாலகாட்டில் ஒட்டப்பாலம் அருகே பேரூர் கிராமத்தில் முன்னணி கதகளி நிறுவனமான காந்தி சேவா சதனில் சேர்ந்தார், மேலும் பல்லசனா சந்திரமன்னாடியாரின் சீடராக தனது படிப்பைத் தொடர்ந்தார். பின்னாளில் இதே சதனத்தில் செண்டை ஆசிரியரானார். [1] மட்டன்னூர் சங்கரன்குட்டி போன்ற பல புகழ்பெற்ற கலைஞர்களின் குருவாகத் திகழ்ந்தார்.[3] மத்தளம், இடக்கை, திமிலை இசைப்பதிலும் சதனம் வாசுதேவன் வல்லவராவார் .

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Sadanam Vasudevan". Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
  2. "ബിയാട്രിസിനും സദനം വാസുദേവനും വി. സുരേന്ദ്രനും : സംഗീത നാടക അക്കാദമി ഫെലോഷിപ്പ്" (in ml). Mathrubhumi. 17 September 2020 இம் மூலத்தில் இருந்து 17 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200917025610/https://www.mathrubhumi.com/thrissur/news/17sep2020-1.5059163. 
  3. "Resounding success". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/resounding-success/article4769091.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதனம்_வாசுதேவன்&oldid=3791619" இலிருந்து மீள்விக்கப்பட்டது