சதரூபா சன்யால்

இந்திய நடிகை

சதரூபா சன்யால் ( Satarupa Sanyal )ஒரு பெங்காலி இந்திய சுதந்திர அல்லது இணைத் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகையும், கவிஞரும், சமூக ஆர்வலரும் ஆவார். இவர் இந்தியாவின் கொல்கத்தாவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறார்.[1]

சதரூபா சன்யால்

சதரூபா சன்யால் (இடது), இந்திய சர்வதேச திரைப்பட விழா (2015)
பிறப்புசதரூபா
12 நவம்பர் 1962 (1962-11-12) (அகவை 62)
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்
பிள்ளைகள்சித்ராங்கதா சக்ரவர்த்தி
ரிதாபாரி சக்ரவர்த்தி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் பிதான் சந்திர கிரிஷி விஸ்வவித்யாலயாவில் கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றார். பின்னர் கால்நடை நோயியல் குறித்த முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார். [1]

இவர் இளங்கலை பட்டதாரியாக இருந்தபோது ஒரு கலாச்சார, இலக்கிய சிறிய இதழைத் ("Aw") தொடங்கினார். அது இன்றுவரை தொடர்கிறது. இவரது மகள்கள் சித்ராங்கதா சதரூபா மற்றும் ரிதாபாரி சக்ரவர்த்தி ஆகிய இருவரும் நடிகர்களாக உள்ளனர்.

தொழில்

தொகு

இவர் இந்துஸ்தானி இசை மற்றும் ரவீந்திர சங்கீதம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். மேலும், அனைத்திந்திய வானொலிக்காக நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [2]

1985 முதல் படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் தூர்தர்ஷன் நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் திரைப்படங்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தார். சுக், அபரிசிதா, உத்தராதிகர், பிகல்பா, சுகர் ஜோன், பிரசாப் மற்றும் பங்கா அய்னா ஆகிய படங்களில் நடிப்பு இதில் அடங்கும். [2]

பின்னர், நடிப்பை விட்டுவிட்டு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டார். இவர் ஏழு ஆண்டுகள் பிரபல இயக்குனர் உத்பலேந்து சக்ரபர்த்தியிடம் உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் தனது சொந்த நிறுவனமான "SCUD" இன் கீழ் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திரைப்படமான "அனு" என்ற தனது முதல் திரைப்படத்தை உருவாக்கினார். மேலும், அதாதாயி, தன்யாபி ஃபிர்டி, கலோ சிட்டா, ஒன்ஸ் அபான் எ டைம் இன் கொல்கத்தா, டோபுவோ பசந்தா, ஒன்யோ ஓபலா ஆகியவற்றை இயக்கியுள்ளார்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "Biography". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2023-04-04.
  2. 2.0 2.1 Zooming in

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதரூபா_சன்யால்&oldid=3697143" இலிருந்து மீள்விக்கப்பட்டது