சதாத் அலி கான்

இந்திய அரசியல்வாதி

சதாத் அலி கான் (Sadath Ali Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். முதல் மற்றும் இரண்டாவது மக்களவையிலும் இவர் உறுப்பினராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை வாரங்கல் நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 1953 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை இந்திய அரசாங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.

சதாத் அலி கான்
Sadath Ali Khan
துருக்கியின் இந்திய தூதர்
பதவியில்
மார்ச்சு 1966 – பிப்ரவரி 1967
ஈராக்கின் இந்திய தூதர்
பதவியில்
1962–1965
மக்களவை (இந்தியா)
பதவியில்
1952–1957
தொகுதிஇப்ராகிம்பட்டினம்
பதவியில்
1957–1962
முன்னையவர்பெந்தையல் இராகவ் இராவ்
பின்னவர்பெந்தையல் இராகவ் இராவ்
தொகுதிவாரங்கல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 செப்டம்பர் 1919
ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்Sakina Begum
முன்னாள் கல்லூரிஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

பின்னர் இவர் ஈராக் (1962-1965) [1] மற்றும் துருக்கிக்கான இந்திய தூதராகவும் பணியாற்றினார். [2]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சதத் அலி கான் நவாப் சாயின் இயார் இயங்கிற்கு 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இந்தியாவின் ஐதராபாத்து நகரத்தில் பிறந்தார். [3] ஐதராபாத் நிசாம் கல்லூரியில் தனது கல்வியைப் பெற்ற இவர் பின்னர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புகளைப் பெற்றார். எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக, உருது மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதினார், மேலும் சில ஆங்கில இலக்கியப் படைப்புகளை உருதுவில் மொழிபெயர்த்தார்.

சகினா பேகத்தை மணந்தார், இத்தம்பதியருக்கு ஒரு மகன் இருந்தான். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Embassy of India, Baghdad, Iraq : List of previous Ambassadors of India to Iraq". www.eoibaghdad.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
  2. "Embassy of India, Ankara, Türkiye : Indian Ambassadors to Türkiye". www.indembassyankara.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
  3. "Members Bioprofile". Parliament of India, Lok Sabha. 1947-06-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
  4. "Shri Sadath Ali Khan political profile". ENTRANCEINDIA. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாத்_அலி_கான்&oldid=3789224" இலிருந்து மீள்விக்கப்பட்டது