ஜெய்ன் யார் ஜங்

இந்தியக் கட்டிடக் கலைஞர்

ஜெய்ன் யார் ஜங் (Zain Yar Jung) (1889-1961) ஓர் கட்டிடக் கலைஞராவார்.[1][2] இவர், ஐதராபாத் மாநிலத்தின் தலைமை கட்டிடக் கலைஞராக பணியாற்றினார்.[3]

ஜெய்ன் யார் ஜங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசையது ஜெயினுதின் உசைன் கான்
1889
இறப்பு1961
பணி
கட்டிடங்கள்
விருதுகள்பத்ம பூசண் (1956)
ஜெய்ன் யார் ஜங் (முதல் வரிசை, வலமிருந்து ஆறாவது), உசுமானியா பல்கலைக்கழகப் பொறியியல் மாணவர்களுடன்.

கட்டிடக் கலைஞராகதொகு

இவர், ஓசுமான் சாகர் ஏரி, பாத்சாகி மசூதி, ஹிமாயத் சாகர் ஆகியவற்றின் கட்டுமானத்துடன் தொடர்புடையவர் .

ஐதராபாத் நிசாம் அரசு, நவாப் ஜெய்ன் யார் ஜங், சையத் அலி ராசா ஆகிய இரண்டு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களை உலகெங்கிலும் உள்ள அழகான கட்டிடங்களை ஆய்வு செய்ய சுற்றுப்பயணத்திற்கு அனுப்பியது. இவர்கள் எகிப்தில் புகழ்பெற்ற பெல்ஜியக் கட்டிடக் கலைஞர் எர்னஸ்ட் ஜாஸ்பர் என்பவரைச் சந்தித்து ஐதராபாத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை வடிவமைப்பதற்காக அவரது உதவியைக் கோரினர். [4] ஜாஸ்பரின் கீழ் இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்தில் பணியாற்றினார்.[5]

அரசியல் வாழ்க்கைதொகு

பின்னர், இவர் ஐதராபாத் மாநிலத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்த நிசாமின் தூதராக அனுப்பப்பட்டார்.

நிசாம் இவருக்கு நவாப் என்ற பட்டத்தை வழங்கினார். இந்திய அரசு இவருக்கு 1956 இல் பத்ம பூஷனை விருது வழங்கியது.[5]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ன்_யார்_ஜங்&oldid=3195347" இருந்து மீள்விக்கப்பட்டது