சதானந்த் பக்ரே
சதானந்த் பக்ரே (Sadanand Bakre) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியர் மற்றும் சிற்பி ஆவார். 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். எசு.கே. பக்ரே என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார்.
சதானந்த் பக்ரே | |
---|---|
பிறப்பு | வடோதரா, குசராத்து | 10 நவம்பர் 1920
இறப்பு | 18 திசம்பர் 2007 இரத்தினகிரி, மகாராட்டிரம் | (அகவை 87)
தேசியம் | இந்தியாn |
அறியப்படுவது | ஓவியக் கலை சிற்பம் |
அரசியல் இயக்கம் | மும்பை முற்போக்கு கலைஞர்கள் |
பக்ரே பரோடாவில் பிறந்தார். பம்பாய் முற்போக்கு கலைஞர்கள் குழுவின் நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். [1] [2] இந்தியாவில் நவீன ஓவியக்கலையின் முன்னோடியாகவும் திகழ்ந்தார். [3] 1951 ஆம் ஆண்டில் இவர் பிரிட்டனுக்குச் சென்றார், அங்கு அவர் விரைவாகவே சிற்பத்தை கைவிட்டு ஓவியத்தில் கவனம் செலுத்தினார். காமன்வெல்த் நிறுவனத்தில் (1951), ஆம் ஆண்டு தனிநபர் கண்காட்சியை நடத்தினார். மற்றொன்று 1959 ஆம் ஆண்டில் கேலரி ஒன்னிலும் மற்றும் 1969 ஆம் ஆண்டுக்கும்1975 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு கண்காட்சிகளை நிக்கோலசு டிரெட்வெல் கேலரியிலும் நடத்தினார்.[4]
பக்ரே 1975 ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பினார். பிற்காலங்களில் இவர் தனிமையில் இருந்தார், ஆனால் 2004 ஆம் ஆண்டில் மும்பை கலைஞர்கள் சங்கத்திடமிருந்து வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.[5] 2007 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள முருத்-அர்னாயில் பக்ரே மாரடைப்பால் [1] [4] இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Sadanand Bakre, pioneer of modern art in India, dead - Indian Express". www.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- ↑ "Power of imagery - The Times of India". பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
- ↑ "Artist Collectives". NGMA, India. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ 4.0 4.1 "Sadanand Bakre", superhumanism.eu. Retrieved 2010-08-16.
- ↑ "What use awards? I just need someone to talk to". The Times of India. 21 February 2004. http://timesofindia.indiatimes.com/bombay-times/what-use-awards-i-just-need-someone-to-talk-to/articleshow/509486.cms.