சதுரக்கள்ளி

சதுரக்கள்ளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. antiquorum
இருசொற் பெயரீடு
Euphorbia antiquorum
L.

சதுரக்கள்ளி (Euphorbia antiquorum) என்பது ஆமணக்குக் குடும்பத்தைச் சேர்ந்த சதைப்பற்றுள்ள ஒரு தாவரம் ஆகும். தீபகற்ப இந்தியா முழுவதும் காணப்படுகிறது. தமிழகத்தில் இது வேலிக்காக வளர்க்கப்படுகிறது. பர்மா, சீனா, வங்காளதேசம், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், மலேசியா, மியான்மர், பாக்கித்தான், தாய்லாந்து, பிலிப்பைன்சு, இலங்கை, வியட்நாம் போன்ற அண்டை பகுதிகளிலும், உலகளவில் பல மண்டலங்களிலும் இயற்கையாக காணப்படுகிறது.[1]

இந்தச் செடியின் சாறு சுவர் பூச்சுக் கலவைக்கு ஒரு ஆற்றல்வாய்ந்த மூலப்பொருளாக உள்ளது என்று சிற்சாஸ்திரம் குறித்த சமஸ்கிருத நூலான சமரங்கண சூத்திரத்திரத்தில் குறிப்பிடபட்டுள்ளது.[2]

இந்த தாவர இனமானது யூபோர்பியா பேரினத்தின் மாதிரி இனமாகும்.

விளக்கம்

தொகு

முப்பட்டையான தண்டுகளை அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும். மருத்துவக் குணத்தில் சிறந்த நாற்பட்டையான தண்டுடைய இனமும் அரிதாகக் காணப்படும். இதன் சாறு பால் போன்றது. உடலில் பட்டால் எரிச்சலூட்டும் தன்மைவாய்ந்தது. இது நச்சு மூலிகையாகக் கருதப்படுகிறது.[3]திருப்புனவாயில் என்னுந் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் நான்கனுள் சதுரக்கள்ளியும் ஒன்றாகும்.[4]

மேற்கோள்

தொகு
  1. "Euphorbia antiquorum". www.llifle.com. Retrieved 2018-06-11.
  2. Nardi, Isabella (2007). The Theory of Citrasutras in Indian Painting. Routledge. p. 121. ISBN 978-1134165230.
  3. திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.62
  4. http://www.shaivam.org/sv/sv_sadurakkalli.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரக்கள்ளி&oldid=4230756" இலிருந்து மீள்விக்கப்பட்டது