சதுரங்கா
சதுரங்கா (Chaduranga; கன்னடம்: ಚದುರಂಗ) என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட சுப்பிரமணியராஜா அரசு (1916 – 19 அக்டோபர் 1998) கன்னட மொழியில் எழுதிய ஓர் இந்திய எழுத்தாளராவார். இவர் சர்வமங்கலா, உய்யாலே, வைஷாகா, மற்றும் ஹெஜ்ஜாலா ஆகிய நான்கு புதினங்களையும் , சில சிறுகதைகளையும் எழுதினார். சதுரங்கா 1968ஆம் ஆண்டில் தனது "சர்வமங்கலா" கதையை தழுவி ஒரு திரைப்பதிப்பை இயக்கிருந்தார். அதே நேரத்தில் 1969ஆம் ஆண்டில் "உய்யாலே" அதே பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டது. [2]
சதுரங்கா | |
---|---|
பிறப்பு | சுப்பிரமணியராஜா அரசு 1916 |
இறப்பு | 19 அக்டோபர் 1998 (அகவை 81–82)[1] மைசூர், இந்தியா |
விருதுகள்
தொகுசதுரங்காவுக்கு 1982ஆம் ஆண்டில் மாநில சாகித்திய அகாதமி விருதும்,[3] கர்நாடக மாநில இராஜ்யோத்சவ விருதும், இவரது 'வைசாகா' நூலுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதும் 1993இல் மைசூர் பல்கலைக்கழகத்தால்[4] கௌரவ மருத்துவர் பட்டமும் வழங்கப்பட்டது. மண்டியாவில் நடைபெற்ற 7வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாட்டின் தலைவராகவும் இருந்தார்.
இறப்பு
தொகுசதுரங்கா, 1998 அக்டோபர் 19 அன்று தனது எண்பத்திரண்டு வயதில் மைசூரில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.
- ↑ https://m.youtube.com/watch?v=Whj5XqRzgAI&feature=youtu.be
- ↑ http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10307.htm#kannada பரணிடப்பட்டது 26 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Personalities of Mysore". Archived from the original on 21 August 2008.
- ↑ "Noted Kannada writer dead". The Tribune. 21 October 1998. பார்க்கப்பட்ட நாள் 15 April 2017.