சதுர்தச கோயில்
சதுர்தச கோயில் (Chaturdasha Temple) இந்தியாவின் திரிபுரா மாநிலம் அகர்த்தலாவில் உள்ளது. இந்து கோயிலான இது, திரிபுராவில் உள்ள கிராமக் குடிசைகளின் கூரைகளின் வடிவத்தில் திரிபுரி குவிமாடம் வடிவத்தில் உள்ளது. குவிமாடம் தூபி போன்ற அரைக்கோள கட்டமைப்பால் சூழப்பட்டுள்ளது. இவ்வடிவம் பௌத்த செல்வாக்கின் தடயங்களை வெளிப்படுத்துகிறது. இந்த கோயில் பதினான்கு தெய்வங்களின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து சதுர்தச தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றன. கர்ச்சி பூசை திருவிழாவிற்காக பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
சதுர்தசா கோயில் Chaturdasha Temple | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | திரிபுரா |
மாவட்டம்: | மேற்கு திரிப்புரா மாவட்டம் |
அமைவு: | அகர்தலா |
ஆள்கூறுகள்: | 23°50′29″N 91°20′43″E / 23.8413872°N 91.3451919°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | கிருட்டிண மாணிக்யா |
1760 ஆம் ஆண்டில் திரிபுரா மன்னர் கிருட்டிண மாணிக்யாவால் சதுர்தச கோயில் கட்டப்பட்டுள்ளது. அப்போது அகர்த்தலா திரிபுராவின் தலைநகரமாக மாறியிருந்தது. [1]
மே 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் , திரிபுரா அரசு கோயில் மற்றும் தலைநகர வளாகத்தை புதுப்பிக்கத் தொடங்கியது.[2][3]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ www.ETTravelWorld.com. "Tripura to refurbish old capital complex area to boost tourism - ET TravelWorld". ETTravelWorld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-21.
- ↑ www.ETTravelWorld.com. "Tripura to refurbish old capital complex area to boost tourism - ET TravelWorld". ETTravelWorld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-21.
- ↑ "Tripura govt to refurbish old capital complex area". https://timesofindia.indiatimes.com/city/agartala/tripura-govt-to-refurbish-old-capital-complex-area/articleshow/100405580.cms.