சத்தியம் சங்கரமஞ்சி

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு கதை சொல்லி

சத்தியம் சங்கரமஞ்சி (Satyam Sankaramanchi) (3 மார்ச் 1937 – 1987) என்பவர் ஒரு கதைசொல்லி ஆவார். இவர் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள குண்டூர் நகரத்திற்கு அருகிலுள்ள அமராவதி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவர் சொன்ன கதைகள் அமராவதி என்ற சிறிய கிராமத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது.

சத்தியம் சங்கரமஞ்சி
பிறப்பு(1937-03-03)மார்ச்சு 3, 1937
அமராவதி கிராமம், குண்டூர் மாவட்டம்
இறப்பு1987
தொழில்எழுத்தாளர்
மொழிதெலுங்கு
தேசியம்இந்தியன்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அமராவதி கதலு, ஆகரி பிரேமலேகா

இவர் எழுதிய அமராவதி கதலு என்ற சிறுகதை தெலுங்கின் சிறந்த சிறுகதைத் தொடர்களுள் ஒன்று என முல்லபுடி குறிப்பிடுகிறார். பி. எஸ். மூர்த்தி என்பவர் இதனைத் தெலுங்கில் உள்ள சிறந்த சிறுகதைத் தொகுதிகளில் ஒன்று என்று கூறுகிறார்.[1] [2] மேலும் டி. அஞ்சனேலு என்பவரும் இது ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு என்று பாராட்டுகிறார்.[3]

இவரது "வெள்ளம்" என்ற சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[4] இவர் எழுதிய சில கதைகளை சியாம் பெனகல் என்னும் திரைப்பட தயாரிப்பாளர் அம்ராவதி கி கதயன் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பினார்.[5]

குறிப்பிடத்தகுந்த படைப்புகள் தொகு

  • ஆகரி பிரேமலேகா
  • அமராவதி கதலு
  • கார்திகா தீபாலு
  • ரீபடிதார்

சான்றுகள் தொகு

  1. P. S. Murthy was the head of the Department of English at Adoni College until June 1996. "Department of English: Genesis". Adoni College. Archived from the original on 3 September 2014.
  2. Murthy, P. S. (1992). "Short Story (Telugu)". Encyclopaedia of Indian Literature: Volume V, sasay to zorgot. Ed. Lal, Mohan. New Delhi: Sahitya Akademi. 4074–4076, page 4076. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1221-8. 
  3. Anjaneylu, D. (1980). "Telugu: Variety and Wish Fulfilment". Indian Literature 23 (6): 80–87, page 83. 
  4. "The Flood: A shortstory". The Hindu Sunday Magazine. 1 July 2001 இம் மூலத்தில் இருந்து 26 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080726164913/http://www.hinduonnet.com/folio/fo0107/01070240.htm. 
  5. Agarwal, Amit (1994). "Teletalk: Shyam Benegal all set to return to DD's National Network". India Today 19 (15 January): 204 இம் மூலத்தில் இருந்து 3 September 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140903183802/http://indiatoday.intoday.in/story/shyam-benegal-all-set-to-return-to-dds-national-network/1/292656.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தியம்_சங்கரமஞ்சி&oldid=3179234" இலிருந்து மீள்விக்கப்பட்டது