சியாம் பெனகல்

இந்திய இயக்குநர் மற்றும் திரைக்கதையாசிரியர்

சியாம் பெனகல் (Shyam Benegal, பிறப்பு: 14 டிசம்பர் 1934) ஒரு இந்திய இயக்குனரும், திரைக்கதையாளரும் ஆவார். இவர், “மத்திய திரைப்படங்கள்” (middle cinema) என்ற புதிய பதம் உருவாகக் காரணமானவர். ஆனால் அவர் இந்த பதத்தை விரும்பவில்லை. அவர் புதிய அல்லது மாற்று என்ற பதத்தையே விரும்பினார்.[1] மேலும் இவர் , 16-06-2006 முதல் 15-06-2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையின் நியமன உறுப்பினராவும் நியமிக்கப்பட்டார்..

சியாம் பெனகல்
சியாம் பெனகல், அவரது அலுவலகத்தில், மும்பை, இந்தியா, டிசம்பர், 2010
பிறப்பு14 திசம்பர் 1934 (1934-12-14) (அகவை 89)
திரிமுல்கேரி, ஐதராபாது, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
பணிஇயக்குனர், திரைக்கதையாளர்
விருதுகள்1976 பத்மஸ்ரீ
1991 பத்மபூஷன்
2005 தாதா சாகேப் பால்கே விருது
2013 ANR தேசிய விருது

திரைப்படங்கள்

தொகு

மந்தன்

தொகு

1978ம் ஆண்டில் சியாம் பெனகல் "மந்தன்" என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தின் கதையை இவரும், இந்திய வெண்மைப்புரட்சியின் தந்தை என்று கூறப்படும் வர்கீஸ் குரியனும் இணைந்து எழுதினர். படத்தை பெனகல் இயக்கினார். கூட்டு இயக்கங்கள் எத்தகைய வெற்றியை தரும் என்பதை வர்கீஸ் குரியன் நடத்திய வெண்மைப் புரட்சி இயக்கம் நடைமுறையில் காட்டியது. இந்திய மக்கள் பாலுக்கு அலைந்த நிலை மாறி பால் ஏராளமாக கிடைக்கும் நிலை இந்த புரட்சியின் மூலம் உருவானது. திரைப்படத்தை தயாரிக்க குஜராத் பால் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் ஐந்து லட்சம் பேரும் தலா இரண்டு ரூபாயை நன்கொடையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

சம்விதான்

தொகு

"இந்திய அரசமைப்புச்சட்டம் உருவான வரலாறு - சம்விதான்" திரைப்படம் பத்து தொடர் கொண்ட திரைப்படமாகும். இத்தயாரிப்புக்கு மாநிலங்களவை தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் காலகட்டம் 1947 முதல் 1949 வரை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஏழு அல்லது எட்டு மாதங்களுக்கு முன்னதாக திரைப்படம் தொடங்குகிறது. அதற்குப்பின் அது குடியரசாக அறிவிக்கப்படுவதுடன் திரைப்படம் முடிகிறது. இக்கால கட்டத்தில் பல சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இந்தியா துண்டாடப்பட்டு இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்ட துயரமான சம்பவம் அக்காலகட்டத்தில் நடந்தது.[2]

பெனகல்@ஒர்க் திருவிழா

தொகு

இவரின் திரைப்படங்களை தொலைக்காட்சியில் வெளியிட ஜீ கிளாசிக் அலைவரிசை தீர்மானித்துள்ளது. அவருடைய திரைப்படங்களை ஒரு மாத காலத்திற்கு திரையிட இந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்திருவிழாவுக்கு அந்நிறுவனம் “பெனகல்@ஒர்க்” என்று பெயர் சூட்டியுள்ளது. ஜீ கிளாசிக் அலைவரிசை ஜனவரி 11 முதல் பெனகலின் திரைப்படங்களை திரையிடத் தொடங்கும்.[2]

விருதுகள்

தொகு

அவருக்கு 1976ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 1991ம் ஆண்டில் அவருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது, 2007ம் ஆண்டில் இந்திய திரைப்படத்துறையின் மிகப் பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி அரசு இவரைக் கவுரவித்தது. இவர் உருவாக்கிய ஆங்கூர், மந்தன், நிஷாந்த், ஜூனோன், ஆரோஹன் உள்ளிட்ட ஏழு இந்தி திரைப்படங்களுக்கு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அத்துடன், கேன்ஸ், பெர்லின், மாஸ்கோ சர்வதேச திரைப்படவிழாக்களிலும் இவர் விருது பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian directors at filmofdesire". Archived from the original on 2007-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-12.
  2. 2.0 2.1 2.2 2.3 "சியாம் பெனகல் திரைப்படங்களின் திருவிழா". தீக்கதிர்: pp. 8. 11 சனவரி 2014 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_பெனகல்&oldid=3554125" இலிருந்து மீள்விக்கப்பட்டது