சத்தீசு பாண்டே
சத்தீசு பாண்டே (Satish Pande) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். புனே நகரத்தைச் சேர்ந்த இவர் ஒரு பாதுகாவலராகவும் ஆராய்ச்சியாளராகவும் அறியப்படுகிறார். புனேவிலுள்ள கெம் மருத்துவமனையில் கடினமான சூழ்நிலைகளில் தலையிடும் ஒரு கதிரியக்க நிபுணராக உள்ளார்.[1][2] இயற்கைக் கல்வி மற்றும் பாதுகாப்பில் பணிபுரியும் எலா அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். எலா அறக்கட்டளை என்பது இயற்கை கல்வி மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு சாரா பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.[3][4][5][6] சத்தீசு பாண்டே மகாராட்டிரா அறிவியல் அகாடமியிலும், இலண்டனின் லின்னியன் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். காட்டுப் பறவைகள் பற்றிய பல ஆய்வுகளையும் இவர் வெளியிட்டுள்ளார்.[7][8]
படைப்புகள்
தொகுவடமேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாம்பர்வாடி பீடபூமியில் பறவைகள் மீது காற்றாலைகளின் தாக்கம் பற்றிய ஆய்வு நூல் ஒன்றையும் இவர் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Swati Shinde Gole (Apr 11, 2020). "This busy radiologist is also a saviour to injured wild birds | Pune News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
- ↑ "Dr. Satish Pande « KEM Hospital | Pune". KEM Hospital | Pune (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.
- ↑ Neha Madaan, TNN 12 Feb 2013 - Times of India Birds at risk of collision in wind farms, says study (Accessed on 17 Feb 2013)
- ↑ Khursheed Dinshaw - harmonyindia.org Flying high (Accessed on 17 Feb 2013)
- ↑ Construction firm to gift houses to homeless birds - Adnan Attarwala - Mid Day - 2 Jun 2012
- ↑ Deshpande, Devidas (14 September 2011). "Getting conservative!". Pune Mirror. https://punemirror.indiatimes.com/pune/cover-story/getting-conservative/articleshow/32042352.cms. பார்த்த நாள்: 18 December 2018.
- ↑ "Satish Achyut Pande". ResearchGate.
- ↑ "About Us – Ela Foundation" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.