சத்பால் தன்வார்

தலீத் அரசியல்வாதி

சத்பால் தன்வார் (Satpal Tanwar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியான்று இவர் பிறந்தார். பட்டியல் இனத்தவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பீம் சேனா என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவராகவும் அறியப்படுகிறார்.

சத்பால் தன்வார்
Satpal Tanwar
பீம் சேனா நிறுவனர் மற்றும் தேசிய தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
01 அக்டோபர் 2010
முன்னையவர்'நிறுவல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1984 (1984-10-29) (அகவை 40)
குருகிராம், அரியானா, இந்தியா
துணைவர்நிசா தன்வார்
வேலைசமுதாய செயற்பாட்டாளர்

தொழில்

தொகு

அகில இந்திய அம்பேத்கர் இராணுவம் எனப்படும் பீம் சேனா அமைப்பை சத்பால் தன்வார் நிறுவினார். தேசியத் தலைவராகவும் செயல்பட்டார். பீம் சேனா 2010 ஆம் ஆண்டு சத்பால் தன்வாரால் நிறுவப்பட்டது, சகாரன்பூர் வன்முறை வழக்கில் செயலற்ற தன்மை நீடித்ததற்காக சந்தர் மந்தரில் 2017 ஆம் ஆண்டு போராட்டங்களை ஏற்பாடு செய்ததில் இவர் முக்கிய நபராக இருந்தார். 2017 ஆம்ம் ஆண்டு பீம் படைக்கு ஆதரவாக இருந்தார் [1] [2]

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சாதிய போராட்டங்களில் பங்கேற்றார். தில்லியில் உள்ள கமலா நேரு பூங்காவில் பீம் சேனா உறுப்பினர்களை கூட்டவும் ஏற்பாடு செய்தார்.

2020 ஆம் ஆண்டில், குருகிராமில் அத்ராசு கூட்டுப் பலாத்கார வழக்குக்கு எதிராக இவர் மற்ற தலித் அமைப்புகளுடன் இணைந்து ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்தார். [3]

சர்ச்சைகள்

தொகு

நாட்டுப்புற இராக்னி பாடல் ஒன்றில் தலித் சமூகத்தை இழிவுபடுத்தியதாக அரியான்வி நடனக் கலைஞர் சப்னா சவுத்ரி மீது தன்வார் பட்டியலின சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். 2016 ஆம் ஆண்டு வழக்குக்குப் பிறகு சப்னா தற்கொலைக்கு முயன்றார். தனக்கு எதிராக இணையத்தில் பிரச்சாரம் செய்ததற்காக தன்வார் மீது குற்றம் சாட்டினார். பின்னர் சப்னா மீதான வழக்கு இரத்து செய்யப்பட்டு இவர் மீது தூண்டுதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. [4] [5]

பின்னர் இவர் அடையாளம் தெரியாத ஆண்களால் (சப்னாவின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள்) இரவு நேரத்தில் தாக்கப்பட்டார். [6] பின்னர் வழக்கை திரும்பப் பெறுவதற்காக இந்திய இராணுவ வீரர் ஒருவராலும் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கப்பட்டார். [7]

2022 ஆம் ஆண்டில் , நூபுர் சர்மாவுக்கு எதிரான பெண் வெறுப்பு மற்றும் இழிவான கருத்துக்களை தெரிவித்ததற்காக தன்வார் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார், ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது இவர் அத்தகைய அவதூறான கருத்துக்களை கூறினார். சப்னாவின் நாக்கை அறுத்து இவரிடம் கொண்டு வருபவருக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். சப்னா தூக்கிலிடப்படுவதற்கு தகுதியானவர் என்றும் இவர் கூறினார், இறுதியில் இவரது கீச்சகம் கணக்கு இடைநிறுத்தப்பட்டது. [8] கைது செய்யப்பட்டார், ஆனால் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். [9]

மேற்கோள்கள்

தொகு
  1. Live, A. P. N. (2017-05-23). "Violence returns to Saharanpur in Mayawati shadow, Bhim Army looks to grow" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-12-03. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  2. "Sister, mother take stage". பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  3. Desk, Global Tribune (2020-10-03). "Congress To Hold Nationwide Campaign Over Hathras Gang-Rape Case, Opposing Yogi Govt" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  4. "Activist booked for Haryanvi singer's suicide attempt | Gurgaon News" (in ஆங்கிலம்). TNN. Sep 6, 2016. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  5. "Row over 'anti-Dalit' song: Day after singer Sapna Choudhary's suicide bid, charges and counter-charges" (in ஆங்கிலம்). 2016-09-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  6. "Gurgaon: Activist who filed case against Haryanvi singer 'attacked'" (in ஆங்கிலம்). 2017-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  7. "Soldier arrested for threatening Dalit activist over police case | All India Exservicemen Joint Action Front (Sanjha Morcha)". பார்க்கப்பட்ட நாள் 2020-10-12.
  8. Live, A. B. P. (2022-06-09). "'नूपुर शर्मा की जुबान काटकर लाने वाले को 1 करोड़,' भीम सेना चीफ ने की विवादित टिप्पणी" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
  9. "Court grants bail to Bhim Sena Chief arrested for threatening Nupur Sharma" (in ஆங்கிலம்). 2022-06-21. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்பால்_தன்வார்&oldid=3859967" இலிருந்து மீள்விக்கப்பட்டது