நுபூர் ஷர்மா

இந்திய அரசியல்வாதி (பிறப்பு 1985)

நுபூர் சர்மா (Nupur Sharma, பிறப்பு: 23 ஏப்ரல் 1985) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவராவார் (2008-09).[1] 2006 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழக இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பட்டப்படிப்பில் (LL.B.) தேர்ச்சி பெற்றார். சர்மா லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலிருந்து LL.M பட்டம் பெற்றார்.

நுப்பூர் சர்மா
செய்தித் தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
2020–2022
குடியரசுத் தலைவர்ஜெகத் பிரகாஷ் நட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஏப்ரல் 1985 (1985-04-23) (அகவை 38)
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2005–2022)
கல்வி
வேலை
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி

சர்மா தற்போது வழக்கறிஞராகவும் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். இவர் தில்லி மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புது தில்லி தொகுதியில் போட்டியிட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுபூர்_ஷர்மா&oldid=3638217" இலிருந்து மீள்விக்கப்பட்டது