சத்யநாராயண சிறீகாந்தா
சத்யநாராயண சிறீகாந்தா (Sathyanarayana Srikanta) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மருத்துவர் ஆவார். உட்சுரப்பியல் துறையில் ஆராய்ச்சியாளராக இவர் அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு முதல் இவர் இந்தியாவின் பெங்களூரில் உள்ள சமத்துவம் உட்சுரப்பியல் நீரிழிவு மையம்[1] மற்றும் ஞான சஞ்சீவினி மருத்துவ மையம் ஆகியவற்றில் மருத்துவ இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.[2] 29 வயதில் ஆர்வர்ட்டு மருத்துவப் பள்ளியில் ஆசிரியராகவும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆய்வாளராகவும் ஆனார்.
சத்யநாராயணா சிறீகாந்தா Sathyanarayana Srikanta | |
---|---|
குடியுரிமை | இந்தியா |
பணியிடங்கள் | ஆர்வார்டு மருத்துவப் பள்ளி |
கல்வி கற்ற இடங்கள் | அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் |
கல்வி
தொகுசத்யநாராயண சிறீகாந்தா இந்தியாவின் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் உள் மருத்துவத்தில் முதுநிலை மருத்துவம் படிப்பை முடித்தார். அமெரிக்க உட்சுரப்பியல் கல்லூரியில் இவர் உறுப்பினராகவும் உள்ளார்.[3]
பொதுவாழ்க்கை
தொகுகடந்த முப்பது ஆண்டுகளாக சமத்துவம் அறக்கட்டளையில்[4] திசா, தோசுட்டி[5] மற்றும் தீபா [6] ஆகிய பெயர்களின் மூலம் தனது பங்களிப்பின் மூலம் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு சேவை செய்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gundu H.R. Rao. "Need for a national platform in India, for effective management and prevention of NCDs". ypchronic.org. Archived from the original on 2015-11-23.
- ↑ Greenberg, Riva (2014-09-10). "Corruption and Culture Increase Diabetes Deaths in India". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
- ↑ "Dr. Sathyanarayana Srikantha". fbae.org/.
- ↑ "The barefoot doctor who has caused a 1,000 healthy smiles - Bangalore Mirror -". Bangalore Mirror. பார்க்கப்பட்ட நாள் 2015-11-23.
- ↑ "A dose of aid for those in need". The Hindu. 7 March 2007. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/article1807260.ece.
- ↑ "Ray of hope for poor young diabetics". The Hindu. 4 August 2008. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Ray-of-hope-for-poor-young-diabetics/article15272187.ece. பார்த்த நாள்: 18 December 2018.