சத்யவதி தேவி

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்

சத்யவதி தேவி (Satyavati Devi) (1904-1945) இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கேற்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க் என்று கருதப்பட்டார்.

குடும்பம்

தொகு

இவர் சுவாமி சிரத்தானந்தரின் பேத்தியும், மற்றும் வழக்கறிஞர் தனி ராம் மற்றும் வேத் குமாரியின் மகளும் ஆவார். இவர் டெல்லி கிளாத் மில்ஸ் அதிகாரியை மணந்தார்.

செயற்பாடு

தொகு

தில்லியில் உள்ள தேசியவாத பெண்களில், சத்யவதி தலைமைப் பாத்திரத்தை வகித்தார். அருணா ஆசப் அலி சத்யவதியை தேசியவாத இயக்கத்தில் சேர ஊக்குவித்ததாக பாராட்டுகிறார். சத்தியவதி குவாலியர் மற்றும் தில்லியில் உள்ள ஜவுளி ஆலைகளில் தொழிலாளர்களிடையே சமூகப் பணிகளை மேற்கொண்டார். இவர் காங்கிரஸ் மகிளா சமாஜ் [1] மற்றும் காங்கிரஸ் தேஷ் சேவிகா தளம் ஆகியவற்றை நிறுவினார், மேலும் இவர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியையும் நிறுவினார். சிவில் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தீவிரமாக பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது இவர் டெல்லியில் காங்கிரஸின் பெண்கள் பிரிவின் தலைவராக ஆனார். மேலும், இயக்கத்தை வழிநடத்தினார். டெல்லியில் உப்புச் சட்டத்தை மீறுவதற்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 1932 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இவருக்கு ப்ளூரிசி மற்றும் காசநோய் ஏற்பட்டது. சிறையில் இருந்தபோது, மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதிலும், இவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகுவேன் என்று உறுதியளிக்க மறுத்தார். இவ்வாறு உறுதியளிக்க இசைந் திருந்தால் இவர் விடுதலையைப் பெறவும், சிகிச்சைக்கான நம்பிக்கையைப் பெற்றிருக்கவும் முடியும். [2] இவர் 1945 ஆம் ஆண்டில் 41 வயதில் காசநோயால் இறந்தார்.

எழுத்துக்கள்

தொகு

சிறையில் இருக்கும் பெண் அரசியல் சுதந்திர போராளிகள் கவிதைகள் மற்றும் தேசியவாத துண்டுப்பிரசுரங்களை இயற்றினர், அவை கடத்தப்பட்டு வெளியிடப்பட்டன. சத்யவதி தேவி எழுதிய 'பஹின் சத்யவதி கா ஜெயில் சந்தேஷ்' (சகோதரி சத்யவதியின் சிறைச் செய்தி) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.[3] அந்தச் செய்தியானது பின்வருமாறு.

This is a message from your jailed sister
Sister Satyavati appeals to you
Do not slacken from your work
Jump, if required, into the burning flames
The sacred battle should be full of strength
Once you have stepped forward, never retreat
Die before the men in the battlefield
Do not fear bullets or sticks
Put your head forward before the men
Once lit, the fire should never go out
I have full faith now
Because the women have prepared themselves[a]


இந்தச் செய்தியின் பொருளானது, “இந்தச் செய்தி சிறையிலடைக்கப்பட்ட உங்கள் சகோதரியினுடையது, சகோதரி சத்யவதி உங்களிடம் வேண்டுவது யாதெனில், ஒரு போதும் உங்கள் பணியை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம். தேவைப்பட்டால் நெருப்பில் கூடக் குதியுங்கள். புனிதமான கோட்டையானது வலிமை மிகுந்ததாய் இருக்க வேண்டும். நீங்கள் முன்னோக்கிச் செல்ல தடுக்கப்பட்டால், ஒருபோதும் பின்திரும்பாதீர்கள். போர்க்களத்தில் உங்கள் எதிரே நிற்பவனுக்கு முன்னதாகச்செத்து விடுங்கள். துப்பாக்கிக் குண்டுகளுக்கோ, தடிக்கம்புகளுக்கோ பயந்து விடாதீர்கள், உங்களைத் தாக்க வரும் மனிதனுக்கு முன்னதாக உங்கள் தலையை நிமிர்த்தி நில்லுங்கள். எனக்கு இப்போது முழு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், இப்போது பெண்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்கள். ” என்பதாக உள்ளது.

இந்தச் செய்தியும், இதைப் போன்ற பிற எழுத்துகளும் விடுதலைப் போராட்டத்தில் பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு எழுதப்பட்டவையே.

அங்கீகாரம்

தொகு

இவர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் வெற்றிபெறாத கதாநாயகி என்று நம்பப்பட்டாலும், 1972 ஆம் ஆண்டில் டெல்லி அரசாங்கம் இவரது பெயரை டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழுள்ள ஒரு கல்லூரிக்கு இவரது பெயரைச் சூட்டியது. [4]மகாத்மா காந்தி இவரை தூஃபனி (சூறாவளி/ புயல் போன்ற) பெஹான் (சகோதரி) என்று அன்புடன் பெயரிட்டார். [5] இவர் விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு

 

  1. Copied verbatim from the referred article.
  1. "CONGRESS SOCIALIST PARTY (CSP) AT A GLANCE AND SHORT PROFILES WORKS OF ITS LEADERS" (PDF). lohiatoday.com. p. 91. Archived from the original (PDF) on 23 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
  2. "Toofani Satyawati An Unsung Heor of Freedom Struggle" (PDF). www.manushi.in. Manushi – Forum for Women's Rights & Democratic Reforms. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 October 2015.
  3. Thapar-Björkert, Suruchi (20 December 2006). "Gender, nationalism and the colonial jail: a study of women activists in Uttar Pradesh". Women's History Review 7 (4): 583–615. doi:10.1080/09612029800200182. 
  4. "About Us". satyawati.du.ac.in/.
  5. "Satyawati College". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/oasis-of-relief/article639091.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யவதி_தேவி&oldid=3552778" இலிருந்து மீள்விக்கப்பட்டது