சத்யவ்ரத்து சதுர்வேதி

இந்திய அரசியல்வாதி

சத்யவ்ரத்து சதுர்வேதி (Satyavrat Chaturvedi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு சனவரி மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

சத்யவ்ரத்து சதுர்வேதி
Satyavrat Chaturvedi
நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியப் பிரதேசம் மாநிலங்களவை
பதவியில்
3 ஏப்ரல் 2012 – 2 ஏப்ரல் 2018
பின்னவர்இராசாமணி பட்டேல், INC
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பதவியில்
1999–2004
முன்னையவர்உமா பாரதி
பின்னவர்இராம்கிருட்டின குசுமாரியா
தொகுதிகச்சுராகோ
Member of the மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்இரகுநாத் சிங்
பின்னவர்சியாம் பெகாரி பதக்கு
தொகுதிசந்தலா
பதவியில்
1993–1998
முன்னையவர்அன்சாரி முகமது கனி
பின்னவர்விஜய் பகதூர் சிங் பண்டேலா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சனவரி 1950 (1950-01-13) (அகவை 74)
சத்தர்பூர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்
நீலம் சதுர்வேதி (தி. 1971)
பிள்ளைகள்நிதின் சதுர்வேதி, நீட்டி சதுர்வேதி, நிதி சதுர்வேதி
பெற்றோர்பாபுராம் சதுர்வேதி (தந்தை)
வித்யாவதி சதுர்வேதி (தாயார்)
முன்னாள் கல்லூரிசைனிக்கு பள்ளி ரேவா
வேலைஅரசியல்வாதி
As of 29 சூன், 2018
மூலம்: ["Biodata". Archive, Govt. of India. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2023-09-11.]

1999 ஆம் ஆண்டில் கச்சுராகோ தொகுதியிலிருந்து இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இரண்டாம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது மாநிலங்களவையில் லோக்பால் மசோதா மீதான தேர்வுக் குழுவின் தலைவராகவும் இவர் இருந்தார்.

ரேவா மாநிலத்திலுள்ள சைனிக் பள்ளியின் முன்னாள் மாணவர் என்றும் சத்யவ்ரத்து அறியப்படுகிறார்..

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

சதுர்வேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூரில் பாபுராம் சதுர்வேதி மற்றும் வித்யாவதி சதுர்வேதிக்கு மகனாகப் பிறந்தார். [1] இவரது தாயார் கச்சுராகோ தொகுதியிலிருந்து மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யவ்ரத்து_சதுர்வேதி&oldid=4109368" இலிருந்து மீள்விக்கப்பட்டது