சந்தானம் (திரைப்படம்)

சந்தானம் 1956 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், எஸ். வி. ரங்கராவ், ரேலங்கி, சாவித்திரி,[2] ஸ்ரீரஞ்சனி, குசும் குமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இதே தலைப்பில் 1955 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பே இத்திரைப்படமாகும். எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்திருந்தார்.

சந்தானம்
இயக்கம்சி. வி. ரங்கநாத தாஸ்
எல். வி. பிரசாத் (மேற்பார்வை)
தயாரிப்புசி. வி. ரங்கநாத தாஸ்
கதைதஞ்சை டி. கே. கோவிந்தன் (வசனம்)
இசைஎஸ். தட்சிணாமூர்த்தி
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
சாவித்திரி
ஒளிப்பதிவுரஹ்மான்
பிரசாத்
ராஜாமணி
படத்தொகுப்புபி. வி. மாணிக்கம்
கலையகம்சாதனா பிலிம்ஸ்
வெளியீடு1956 (1956)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தமிழ்ப் பதிப்புக்கு தஞ்சை டி. கே. கோவிந்தன் வசனமும், குயிலன் பாடல்களும் எழுதினார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-08-26. Retrieved 2018-02-10.
  2. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தானம்_(திரைப்படம்)&oldid=4167422" இலிருந்து மீள்விக்கப்பட்டது