சந்திரகாந்தா கோயல்

இந்திய அரசியல்வாதி

சந்திரகாந்தா கோயல் (Chandrakanta Goyal) இந்தியாவைச் சேற்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1932 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1990, 1995, மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் மட்டுங்கா தொகுதியில் இருந்து மூன்று முறை மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த வேத் பிரகாசு கோயலை மணந்தார். இவர்களது மகன் பியூசு கோயல் மோடி அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.[1][2][3][4]

சந்திரகாந்தா கோயல்
சட்டமன்ற உறுப்பினர் மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
1990–2004
தொகுதிமாதுங்கா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1932 (1932)
இறப்பு (அகவை 88)
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்வேத பிரகாசு கோயல்
பிள்ளைகள்பியூசு கோயல்

சந்திரகாந்தா கோயல் ஜூன் 2020 ஆம் ஆண்டு சூன் மாதம் தனது 88 ஆவது வயதில் இறந்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Piyush Goyal: BJP's man for all seasons", Live Mint, 1 February 2019
  2. Matunga Assembly Constituency Election Result
  3. Piyush Goyal: BJP's go-to man
  4. These men and women will run India for the next 5 years
  5. "Railway Minister Piyush Goyal's mother, senior BJP leader, dies in Mumbai".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகாந்தா_கோயல்&oldid=3786572" இலிருந்து மீள்விக்கப்பட்டது