சந்திரசேகரன் குருசாமி
சந்திரசேகரன் குருசாமி என்பவர் கவிஞர், ஓவியர், எழுத்தாளர் மற்றும் சிற்பி என பன்முகம் கொண்டவர். இவரை ஓவியர் சந்ரு, சந்ரு மாஸ்டர் என்றும் அழைப்பார்கள். மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அம்பேத்கர் சிலை, கல்பாக்கத்தில் உள்ள டாக்டர் ரமணா சிலை போன்ற தமிழகத்தின் பல இடங்களில் இவரது படைப்புகள் வைக்கப்படுள்ளன.
சந்திரசேகரன் குருசாமி | |
---|---|
பிறப்பு | விருதுநகர் | மே 4, 1951
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | ஓவியம், கவிதை, சிற்பம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
பெற்றோர் | குருசாமி - மாரியம்மாள் |
இவர் விருதுநகர் மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை கவின்கலை கல்லூரியில் படித்தார்.
வாழ்க்கை வரலாறு
தொகுசந்திரசேகர் விருதுநகரில் குருசாமி- மாரியம்மாள் தம்பதிகளுக்கு 04 மே 1951 இல் மகனாகப் பிறந்தார்.
ஓவியப் பயிற்சிக் கல்லூரி
தொகு2015 இல் நெல்லையில் ஓவியப் பயிற்சிக் கல்லூரியை தொடங்கினார். இக்கல்லூரி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன்ய இணைந்து செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரி திரைப்பட எடிட்டர் பி. லெனின் அவர்களுடன் இணைந்து சந்ரு உருவாக்கியதாகும். [1]
இக்கல்லூரியில் சிற்பக்கலை இரண்டாண்டு படிப்பாக உள்ளது. படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் பட்டயச் சான்றிதழ் தரப்படுகிறது. சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கூடுதலாக படிக்க ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளது.
சிலை படைப்புகள்
தொகுசென்னை நகரின் சாலை ரவுண்டானாக்களில் வைக்க புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மரப்பாச்சி, தெருக்கூத்து, தொழிலாளர் பிரட்சனை ஆகிய சிலைகள் செய்துள்ளார்.
சிலைகள்
தொகு- பகவதி மார்பளவு சிலை, உச்ச நீதிமன்ற நீதிபதி, சோகோ டிரஸ்ட் - மதுரை.
- மகாத்மா காந்தி முழு உருவச் சிலை - மதுரை உயர்நீதிமன்றத்தில் முழு படம்
- அயோத்திதாச பண்டிதரின் மார்பளவு சிலை - (சித்தா ஆராய்ச்சி மையம்)
- டாக்டர் ரமணன் மார்பளவு சிலை, கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையம்
- அம்பேத்கர் முழு உருவம், உயர்நீதிமன்றம் மதுரை.
லெனின் சிலை
தொகுசந்ரு உருவாக்கிய லெனின் சிலை திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ளது.[2] திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கேட்டு வருத்தம் கொண்ட நண்பர்களுக்காக,. லெனின் சிலையை சந்ரு உருவாக்கினார். இச்சிலையை கண்டு நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி போன்றோர் பாராட்டியுள்ளனர்.
புத்தகங்கள்
தொகு- செப்பாடி தப்பாடி - தற்கால கலை குறித்த விமர்சன புத்தகம்
- விண்வெளியில் - நிர்வாணத்தைப் பற்றிய வரைபடங்களைப் பற்றிய புத்தகம்
- சந்ருவின் கவிதை - கவிதை புத்தகம்
- ஓவியம் என்றொரு மேஜிக் - ஆராய்ச்சி ஆவணங்கள் மற்றும் கட்டுரைகள்
- அவன், இவன், வுவன் - சிறுகதைகள்
- தஞ்சை மாநாடு - புத்தகம் வெளியிடுவதற்கான ஆலோசகராக செயல்பட்டார்.
சிறுகதைகள், கவிதைகள் புத்தங்களும், கலை மற்றும் பாரம்பரியம் குறித்தான ஆய்வு அறிக்கைகள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
தொகு- முதற்பரிசு - 1993 இல் தேசிய அளவிலானா விருது - சிறந்த மேடை வடிவமைப்பு - கலாமேளா
- இரண்டாம் பரிசு - 1996 இல் ஜப்பானில் சர்வதேச பனி சிற்ப திருவிழா
- சிறுகதை விருது - (என்.எல்.சி 2007) நெய்வேலி
- முதல் விருது - 1997 இல் கொழும்பில் தெற்காசிய சுற்றுலா மற்றும் வர்த்தக விழா
- தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர் 2008 (மக்கள் தொலைக்காட்சி)