சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உப்புக்குளம் பிள்ளையார் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு தீர்த்தத்திருவிழா ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் கும்பம் அன்று நிறைவடைவதாக 10 நாட்கள் ஆலயத்திருவிழா நடைபெறும். இங்கு திருவிழாக்காலத்தில் ஒருநாள் தெப்பத்திருவிழா என்று ஆலயக் கோவில்குளத்தில் தோணிமூலம் சுவாமி வலம் வருவது குறிப்பிடத்தக்கவொன்றாகும். இவ்விசேட நாள் அன்று கொழும்புத்துறை மக்கள் மட்டும் அன்றி பக்கத்தில் உள்ள அரியாலை மக்களும் பெருமளவில் பங்குகொள்வர். இவ்வாலயம் 2004 இல் மீண்டும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்வாலயத்தின் அருகே சிறுவர்களுக்கான விளையாட்டுத் திடலும் நூலகமும் அமைந்துள்ளன.
சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் | |
---|---|
உப்புக்குளம் பிள்ளையார் கோவில் | |
ஆள்கூறுகள்: | 9°39′19.66″N 80°2′42.08″E / 9.6554611°N 80.0450222°E |
பெயர் | |
பெயர்: | சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடமாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
அமைவு: | அரியாலை, ஆனந்தன் வடலி வீதியில் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிள்ளையார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |