சந்திராவதி (கவிஞர்)

சந்திராவதி (Chandravati) ஒரு இடைக்கால வங்காளக் கவிஞரான இவர், வங்காள மொழியின் முதல் பெண் கவிஞராக பரவலாகக் கருதப்பட்டார். பெண்களை மையமாகக் கொண்ட காவியமான இராமாயணத்திற்காக இவர் மிகவும் பிரபலமானவர். இவரின் துயரமான காதல் விவகாரம், தூய்மையான காதல், இவரது இரக்கமற்ற முயற்சி அனைத்தும் இவரை வாழ்க்கையிலும் எழுத்திலும் ஈர்த்த காரணிகளாகும். நீண்ட காலமாக, இஅவரது பெயர் வெளிபடுத்தப்படவில்லை. ஆனால் கிராமப்புறங்களில் இவரது புகழ் மகத்தானது. இவரது பாடல்களை மேமன் சிங் மாவட்டத்தில் உள்ள படகு வீரர்கள் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். வங்காளத்தில் இவரது பாடல்கள் அரிசனர்களின் பண்டிகைகளில் கொண்டாடப்படுகின்றன. சந்திரவதி பாடல்கள் இல்லாமல் வங்காள திருமணங்கள் கொண்டாடப்படுவதில்லை என்பது இவரது பிரபலத்தை குறிக்கிறது.

சந்திராவதி
பிறப்பு1550
கிசோர்கஞ்ச், வங்காளம் (தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு1600
கிசோர்கஞ்ச், வங்காளம்
பணிகவிஞர்
பெற்றோர்பன்சிதாசு பட்டாச்சார்யா

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர், தற்போதைய வங்காளதேசத்தின் டாக்கா கோட்டத்தில் அமைந்துள்ள கிசோர்கஞ்சில் புலேஷோரி ஆற்றின் கரையில் உள்ள பதூரி கிராமத்தில் ஏறக்குறைய 1550 ஆம் ஆண்டில் திஜ்-பன்சிதாசு பட்டாச்சார்யாவுக்கு பிறந்தார். [1] பன்சிதாஸ் மானசா தேவியின் பாடல்களுக்கு இசையமைப்பாளராக இருந்தார். சம்பரு சந்திர மொஹந்தாவின் கூற்றுப்படி, இவர் மானசா மங்கலின் இசையமைப்பாளர்களில் ஒருவராகவும் இருந்தார்.

இலக்கியப் படைப்புகள்தொகு

சந்திராவதி, வங்காள மொழியில் இராமாயணத்தை இயற்றிய இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த முதல் பெண்ணாவார். இவர் மாலுவா மற்றும் தோஷ்ஷோ கேனாராம் என்பதையும் இயற்றியுள்ளார். [2] [3] இவர் சீதையின் பார்வையில் இருந்து இராமாயணத்தை விவரித்து இராமரை விமர்சித்தார். [4] இது ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்பட்ட ஒரு கதையாகும். இது ஆண்பால் வீரத்தை கொண்டாடுவதற்கு பதிலாக, ஆண்களின் கர்வத்தில் சிக்கிய பெண்களின் துன்பத்தை புலம்புகிறது. [5] இருப்பினும் இவரால் தனது பணியை முடிக்க முடியவில்லை.

மேற்கோள்கள்தொகு

  1. Dinesh Chandra Sen (1988). The Ballads of Bengal. 1. Mittal Publications. பக். 14–. https://books.google.com/books?id=Fa4fAsmtVBEC&pg=PR14. 
  2. <url=http://sos-arsenic.net/lovingbengal/purbo.html#4>
  3. Mazumdar, Sucheta; Kaiwar, Vasant; Labica, Thierry (2010). From Orientalism to Postcolonialism: Asia, Europe and the Lineages of Difference. Routledge. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-21198-1. https://books.google.com/books?id=NtKMAgAAQBAJ. பார்த்த நாள்: 27 April 2016. 
  4. Dev Sen, Nabaneeta. "Building A Digital Feminary". Liz Henry. மூல முகவரியிலிருந்து March 19, 2012 அன்று பரணிடப்பட்டது.
  5. Bose, Mandakranta (2013). A Woman's Ramayana: Candravati's Bengali Epic. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-62529-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திராவதி_(கவிஞர்)&oldid=3109047" இருந்து மீள்விக்கப்பட்டது