சந்திர பானு குப்தா

இந்ந்திய அரசியல்வாதி

சந்திர பானு குப்தா (Chandra Bhanu Gupta) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். 1902 ஆம் ஆன்டு சூலை மாதம் 14 ஆம் நாளன்று இவர் பிறந்தார்.[1] 1970 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1980 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பதினோராம் நாளன்று இவர் இறந்தார்.[2]

சந்திர பானு குப்தா
Chandra Bhanu Gupta
3 ஆவது உத்தரப்பிரதேச முதல்வர்
பதவியில்
26 பிப்ரவரி 1969 – 18 பிப்ரவரி 1970
முன்னையவர்ஜனாதிபதி ஆட்சி
பின்னவர்சரண் சிங்
பதவியில்
14 மார்ச் 1967 – 3 April 1967
முன்னையவர்சுசேதா கிருபளானி
பின்னவர்சரண் சிங்
பதவியில்
7 டிசம்பர் 1960 – 2 அக்டோபர் 1963
முன்னையவர்சம்பூர்ணாநந்து
பின்னவர்சுசேதா கிருபளானி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14.07.1902
அட்ராலி, ஆக்ரா மற்றும் ஓத் ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு11.03.1980(77 வயது)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

அவர் 1902 ஆம் ஆண்டு அலிகார் மாவட்டத்தில் உள்ள அட்ரௌலி நகரத்தில் குப்தா பிறந்தார். 17 வயதில் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். ரௌலட் எதிர்ப்பு மசோதா சீதாபூரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.[3] 1929 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியின் லக்னோ நகரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சமூக பங்களிப்பு

தொகு

லக்னோவில் பல்வேறு கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சார மையங்களை நிறுவிய மோதிலால் நேரு நினைவு சங்கத்தின் முக்கிய சக்தியாக குப்தா இருந்தார். இதில் ரவீந்திரலயா, குழந்தைகள் அருங்காட்சியகம், பால் வித்யா மந்திர், லக்னோ ஆச்சார்யா நரேந்திர தேவ் விடுதி, ஓமியோபதி மருத்துவமனை, பல பட்டப் ஒஅடிப்பு கல்லூரிகள் மற்றும் லக்னோவில் உள்ள பொது நூலகம் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.[4] நிர்மல் சந்திர சதுர்வேதியிடம் தீவிரமாக ஆலோசனை பெற்று, நகரின் சமூக, கலாச்சார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தினார்.

தேர்தல் அரசியல்

தொகு

சந்திர பானு குப்தா 1952 ஆம் ஆண்டில் லக்னோ நகர கிழக்கில் இருந்து உ.பி சட்டமன்றத் தேர்தலில் தனது எதிராகப் போட்டியிட்ட ஜனசங்கப் போட்டியாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால் 1957 இல் அதே தொகுதியில் பொதுவுடமைக் கட்சியின் திரிலோகி சிங்கிடம் தோற்றார். பின்னர் அந்த சட்டமன்றத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியின் போதே இவர் முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது எம்எல்சி ஆகியிருக்கலாம். ஆனால் 1962 இல் ராணிகேத் தெற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனார். 1967 மற்றும் 1969 தேர்தல்களில், இவர் ராணிகேட் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த திரிபுவன் நாராயண் சிங்கின் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்கும் அவர் முயற்சியை ஆதரித்தார், ஆனால் அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.kesarwani.net/about/ChandraBhanuGupta.aspx
  2. "Indian states after 1947 M-W". Rulers.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.
  3. 3.0 3.1 "The Sunday Tribune - Books". Tribuneindia.com. Archived from the original on 2013-12-05. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.
  4. Lila Dhar (2009). Bhartiya Charit Kosh. Sharma Rajpal & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174831002. பார்க்கப்பட்ட நாள் 2014-05-21.
  5. "Central leaders trying to find a replacement for UP Chief Minister Ram Naresh Yadav". India Today. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19771130-central-leaders-trying-to-find-a-replacement-for-up-chief-minister-ram-naresh-yadav-823508-2014-09-16. 

வெளி இணைப்புகள்

தொகு
அரசியல் பதவிகள்


முன்னர்
சம்பூர்ணானந்த்
உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
7 டிசம்பர் 1960 – 2 அக்டோபர் 1963
பின்னர்
முன்னர் உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
14 மார்ச் 1967 – 3 ஏப்ரல் 1967
பின்னர்
முன்னர்
ஜனாதிபதி ஆட்சி
உத்தரப்பிரதேச ஆளுநர்,
டாக்டர் பி ஜி ரெட்டியால் நிர்வகிக்கப்படுகிறது,
பதவி முன்பு -
சரண் சிங்
உத்தரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
26 பிப்ரவரி 1969 – 18 பிப்ரவரி 1970
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_பானு_குப்தா&oldid=3845050" இலிருந்து மீள்விக்கப்பட்டது