சந்தீபன் சந்தா

இந்திய சதுரங்க விளையாட்டு வீரர்

சந்தீபன் சந்தா (Sandipan Chanda) ஒர் இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா நகரைச் சேர்ந்தவர் ஆவார். 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 தேதி சந்தீபன் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது. குராகாவ் சதுரங்கத் திருவிழாவில் ஒன்பது புள்ளிகளுக்கு 7.5 புள்ளிகள் எடுத்தார். அலெக்சாண்டர் சாபலோவை விட அரை புள்ளிகள் அதிகம் எடுத்து போட்டியில் இவர் வெற்றி பெற்றார்.[1][2]

சந்தீபன் சந்தா
Sandipan Chanda
சந்தீபன் சந்தா, லெய்டன் 2008
முழுப் பெயர்சந்தீபன் சந்தா
நாடுஇந்தியா
பிறப்பு13 ஆகத்து 1983 (1983-08-13) (அகவை 40)
கொல்கத்தா, இந்தியா
பட்டம்கிராண்டு மாசுட்டர்
பிடே தரவுகோள்2485 (திசம்பர் 2021)
(2013 ஏப்ரல் மாதத்திய பிடே உலகத் தரவரிசையில் எண். 145)
உச்சத் தரவுகோள்2656(மே 2011)

சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் 2004, 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் சார்பாக சந்தீபன் பங்குபெற்றார்.[3]

2013 ஆம் ஆண்டு நடந்த உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் விசுவ நாதன் ஆனந்துக்கு போட்டி உதவியாளராக இருந்தார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற சதுரங்க சாம்பியன் போட்டிகளில் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. Chess is Better in the Caribbean—GM Chanda Sandipan Prevails in the Curaçao International பரணிடப்பட்டது 2018-07-23 at the வந்தவழி இயந்திரம், by Jennifer Shahade
  2. THE WEEK IN CHESS 511 23rd August 2004 by Mark Crowther, theweekinchess.com
  3. "Men's Chess Olympiads: Sandipan Chanda". OlimpBase. பார்க்கப்பட்ட நாள் 1 May 2011.
  4. "Chanda Sandipan weer winnaar Open NK schaken". www.gelderlander.nl (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2018-07-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீபன்_சந்தா&oldid=3242907" இலிருந்து மீள்விக்கப்பட்டது