சந்தீப் திரிவேதி

இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர்

சந்தீப் திரிவேதி (Sandip Trivedi) ஓர் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். 1963 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். இந்தியாவின் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது இவர் இந்நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். சரக் கோட்பாட்டிற்கான இவரது பங்களிப்புகளுக்காக நன்கு அறியப்படுகிறார். குறிப்பாக ரெனாட்டா கலோசு, ஆண்ட்ரி லிண்டே மற்றும் சமித் கச்ரு போன்றவர்களுடன் இணைந்து குறைந்த ஆற்றல் மீசமச்சீர் சரத்தில் பிரபஞ்சத்தின் துரித விரிவாக்கத்தின் முதன்மையான மாதிரிகளை (கே.கே.எல்.டி பொறிமுறை) கண்டறிந்தார். [1] இவரது ஆராய்ச்சிப் பகுதிகளில் சரக் கோட்பாடு, அண்டவியல் மற்றும் துகள் இயற்பியல் ஆகியவை அடங்கும். இப்போது கோட்பாட்டு அறிவியலுக்கான பன்னாட்டு மையத்தின் திட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இயற்பியல் அறிவியல் பிரிவில் 2010 ஆண்டிற்கான இன்ஃபோசிசு பரிசு பெற்றார்.[2]

சந்தீப் திரிவேதி
Sandip Trivedi
பிறப்பு5 ஏப்ரல் 1963
இந்தியா
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
மேம்பாட்டு ஆய்வு நிறுவனம்
ஆய்வு நெறியாளர்இயான் பிரெசுகில்
அறியப்படுவதுகே.கே.எல்.டி. பொறிமுறை
விருதுகள்
துணைவர்சூபா டோல்

கல்வி

தொகு

இவர் 1985 ஆம் ஆண்டில் கான்பூர் இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் முடித்தார். 1990 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பசடேனாவில் உள்ள கால்டெக் நிறுவனத்தில் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பின்னர் இவர் 1992 ஆம் ஆண்டு வரை பிரின்சுடன் மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தில் முனைவர் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி கூட்டாளராக பணியாற்றினார்.

விருதுகள்

தொகு

2005 ஆம் ஆண்டு இயற்பியல் அறிவியலுக்கான மதிப்புமிக்க சாந்தி சுவரூப் பட்நாகர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இயற்பியல் அறிவியல் பிரிவில் 2010 ஆம் ஆண்டு இன்போசிசு பரிசைப் பெற்றார்.[3] 2015 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக உலக அறிவியல் அகாதமி விருதும் இவருக்க வழங்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Kachru, Shamit; Kallosh, Renata; Linde, Andrei; Trivedi, Sandip P. (2003). "de Sitter Vacua in String Theory". Physical Review D 68 (4): 046005. doi:10.1103/PhysRevD.68.046005. Bibcode: 2003PhRvD..68d6005K. 
  2. Infosys Prize 2010 - Physical Sciences பரணிடப்பட்டது 17 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. Infosys Prize 2010 - Gallery பரணிடப்பட்டது 30 நவம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
  4. "Prizes and Awards". The World Academy of Sciences. 2016.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தீப்_திரிவேதி&oldid=3791781" இலிருந்து மீள்விக்கப்பட்டது