சந்துலால் ஜெயின்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

ஜே. சந்துலால் ஜெயின் (J. Chandulal Jain) ஓர் பிரபலமான கன்னடத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். குறிப்பாக தாயே தேவரு, பூதய்யனா மக அய்யு, தப்பலியு நீனாடே மகனே, மற்றும் பக்த சிரியாலா போன்ற கிட்டத்தட்ட 40 படங்களை தயாரித்துள்ளார். இந்தியில் கோதுலி மற்றும் பியார் கார்கே தேகோ போன்ற திரைப்படங்களையும் தயாரித்தார். இவரது இது சாத்தியா என்ற படம் 48 மணி நேரத்தில் படமாக்கப்பட்டது.

சந்துலால் ஜெயின்
பிறப்புஜே. சந்துலால் ஜெயின்
பாடிவ் ( இராசத்தான் )
இறப்பு(2009-12-17)17 திசம்பர் 2009
பெங்களூர்
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1971–2009
அறியப்படுவதுதேசிய விருது பெற்றவர், மாநில அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கன்னட ராஜ்யோத்சவா விருது
குறிப்பிடத்தக்க படைப்புகள்தாயே தேவரு, பூதய்யனா மக அய்யு, தப்பலியு நீனாடே மகனே

தப்பலியு நீனாடே மகனே என்ற படத்திற்கு தேசிய விருதையும் பூதயான மக அய்யு, வீரப்பன், கங்கம்மா கங்காமாயி ஆகிய படங்களுக்காக கர்நாடக அரசின் மூன்று விருதுகளையும் வென்றார். கன்னடத் திரையுலகிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மாநில அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் கன்னட ராஜ்யோத்சவா விருதையும் பெற்றுள்ளார். [1] [2]

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை கன்னட திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். [3]

சொந்த வாழ்க்கை

தொகு

இவரது குடும்பம் இராசத்தானில் உள்ள பாடிவ் என்ற நகரத்தைச் சேர்ந்தது. இவர் 1970 களில் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இவர் லீலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு ராஜகுமார் மற்றும் ரோஹித் என்ற இரண்டு மகன்களும் மற்றும் இரண்டு மகள்களும் இருந்தனர். இவர் ஆரம்பத்தில் ஒரு துணி வியாபாரியாக த்னது வாழ்க்கையைத் தொடங்கினார் . இவர் கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில் பணிபுரியும் போது பல புகழ்பெற்ற திரைப்பட பிரபலங்கள் - நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது.

திரையுலகம்

தொகு

இவர் கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள் மற்றும் பிற பொருட்களை அளித்து வந்தார். சந்துலாலின் மகன் ரோகித் ஜெயின் கருத்துப்படி, சந்துலாலின் சரளமான கன்னடத்தில் ராஜ்குமார் ஈர்க்கப்பட்டு, அந்த மொழியில் திரைப்படங்களைத் தயாரிக்க இவரை ஊக்குவித்தார். ராஜ்குமாரின் சகோதரர் சி. பு. வரதப்பா, சந்துலாலின் நெருங்கிய நண்பரானதால் நடிகர்களை ஒப்பந்தம் செய்து தந்தார். இதன் விளைவாக, சந்துலால் ராஜ்குமாரின் தாயி தேவரு என்ற படத்தைத் தயாரித்தார். [1] [2] [4]

இறப்பு

தொகு

நீண்டகால நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 75வது வயதில் 17 டிசம்பர் 2009 அன்று பெங்களூரில் பல அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு இறந்தார்.[1] [2] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 {{cite web}}: Empty citation (help)
  2. 2.0 2.1 2.2 "Threats Chandulal Jain Passes away". 18 December 2009. Archived from the original on 2 February 2013. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.
  3. {{cite web}}: Empty citation (help)
  4. 4.0 4.1 "Chandulal Jain no more". 17 December 2009. பார்க்கப்பட்ட நாள் 24 March 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்துலால்_ஜெயின்&oldid=3852639" இலிருந்து மீள்விக்கப்பட்டது