சேனல் 4

(சனல் 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேனல் 4 (Channel 4) என்பது பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு பொதுத் தொலைக்காட்சி சேவையாகும். இச்சேவை 1982 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம், மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இச்சேவை சுயாதீனத் தொலைக்காட்சி ஆணையத்தினால் நிருவகிக்கப்பட்டுப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சேனல் 4 தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தினால் 1993 ஆம் ஆண்டு முதல் நிருவகிக்கப்பட்டு வருகிறது. வணிக விளம்பரங்கள் மூலம் தனது நிதியைத் திரட்டி வந்தாலும், இது ஒரு பொது நிறுவனம் ஆகும். பிபிசியின் இரண்டு தொலைக்காட்சி சேவைகள், மற்றும் ஐடிவி என்ற ஒரேயொரு வர்த்தக சேவையுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தின் நான்காவது தொலைக்காட்சி சேவையாக சேனல் 4 இணைந்து கொண்டது.

சேனல் 4
ஒளிபரப்பு தொடக்கம் 2 நவம்பர் 1982
உரிமையாளர் சேனல் 4 தொலைக்காட்சி கூட்டுத்தாபனம்
பார்வையாளர் பங்கு 5.3%
1.0% (+1)
(, BARB)
நாடு ஐக்கிய இராச்சியம்
அயர்லாந்து
வலைத்தளம் www.channel4.com
இணையத் தொலைக்காட்சி
சேனல் 4 இணைய ஒளிபரப்பு

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனல்_4&oldid=4048260" இலிருந்து மீள்விக்கப்பட்டது