இலங்கையின் கொலைக்களம்
இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka’s Killing Fields) என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை பற்றிய ஒர் ஆங்கில ஆவணப் படம் ஆகும். இதனை பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 சூன் 14, 2011 அன்று பொதுவில் ஒளிபரப்பியது. இலங்கையில் இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித இனத்துக்கெதிரான குற்றங்கள், மீறல்கள் நடந்தற்கு ஒரு முக்கிய சாட்சியாக இது கருதப்படுகிறது.[1]. இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்ற தலைப்பில் 2012, மார்ச் 14 ஆம் நாள் சேனல் 4 வெளியிட்டது.
இலங்கையின் கொலைக்களம் Sri Lanka's Killing Fields | |
---|---|
வகை | ஆவணப்படம் |
இயக்கம் | காலும் மெக்ரே |
வழங்கல் | ஜோன் ஸ்னோ |
கதைசொல்லி | ஜோன் ஸ்னோ |
பின்னணி இசை | உவைன் ரொபர்ட்ஸ் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம், தமிழ், சிங்களம் |
அத்தியாயங்கள் | 1 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | கிறிஸ் ஷா |
தயாரிப்பாளர்கள் | காலும் மெக்ரே |
படப்பிடிப்பு தளங்கள் | இலங்கை, ஐக்கிய இராச்சியம் |
ஓட்டம் | 49 நிமி. |
தயாரிப்பு நிறுவனங்கள் | ஐடிஎன் தயாரிப்பு |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சேனல் 4 |
ஒளிபரப்பான காலம் | சூன் 14, 2011 |
Chronology | |
பின்னர் | தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் |
வெளியிணைப்புகள் | |
Sri Lanka's Killing Fields |
ஐ.நா மனித உரிமைகள் அவையில் ஒளிபரப்பு
தொகுஇலங்கையின் படுகொலைக்களம் பொதுவில் ஒளிபரப்பப்படும் முன்பு, இது ஐ.நா மனித உரிமைகள் அவையில் மனித உரிமைகள் அமைப்புகளின் வேண்டுதலால் சூன் 3 அன்று காண்பிக்கப்பட்டது.[2]
தாக்கம்
தொகுஇந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானிய அரசு, இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான விசாரணை நடைபெற வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.[3]
தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்
தொகுஇலங்கையின் கொலைக்களம் ஆவணப் படத்தின் இரண்டாவது பகுதி "தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" 2012, மார்ச் 14 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மிகத் தெளிவான நான்கு சம்பவங்களின் அடிப்படையில் இலங்கை அரசுப் படைகள் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளன. முதலாவது ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ள இந்தக் காணொளியில் போர்க் குற்றங்களுக்கான மேலும் ஆதாரங்களைத் தான் வெளியிடுவதாகக் குறிப்பிடுகிறது. இக்காணொளியில் இறுதிக் கட்டப் போரின் போது நடைபெற்றதாக கூறப்படும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன[4].
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- இலங்கையின் கொலைக்களம் - (ஆங்கில மொழியில்)
- Sri Lanka's Killing Fields - (ஆங்கில மொழியில்)