சன்னிலால் கராசியா
சன்னிலால் கராசியா (Chunnilal Garasiya) இராசத்தானைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1990 முதல் 1998 வரை உதய்பூர் ஊரகச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான இவர், 2024 முதல் இராசத்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1]
சன்னிலால் கராசியா | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 ஏப்ரல் 2024 | |
முன்னையவர் | பூபேந்தர் யாதவ் |
தொகுதி | இராசத்தான் |
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 1990 - 1998 | |
தொகுதி | உதய்பூர் ஊரகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | உதயப்பூர் |
கல்வி | மேல்நிலைக் கல்வி |
முன்னாள் கல்லூரி | பூபல் நோபள் கல்லூரி |
கல்வி
தொகுகராசியா உதய்பூரில் உள்ள பூபால் நோபல் கல்லூரி இடைநிலை வரை படித்தார்.[2]
தொழில்
தொகுகராசியா 1990 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் உதய்பூர் கிராமப்புற சட்டமன்ற தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990 முதல் 1992 வரை இவர் இராசத்தான் அரசாங்கத்தின்[3] மாநில அமைச்சராக (சுயாதீன பொறுப்பு) பழங்குடிப் பகுதிகள் மேம்பாடு, பொதுப்பணித் துறை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அலுவலகங்களில் பணியாற்றினார்.[2][4]
இவர் பாஜகவில் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகராசியா 1979-இல் சுசிலா கராசியாவை மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajya Sabha Elections 2024: Full list of winners in polls to 56 Upper House seats". Financialexpress (in ஆங்கிலம்). 2024-02-27. பார்க்கப்பட்ட நாள் 2024-02-28.
- ↑ 2.0 2.1 "BJP announces Madan Rathore, Chunnilal Garasiya as its RS pick from Rajasthan". The Indian Express (in ஆங்கிலம்). 2024-02-12. பார்க்கப்பட்ட நாள் 2024-03-01.
- ↑ "Sonia Gandhi, Chunnilal Garasiya and Madan Lal Rathore elected 'unopposed' to RS from Rajasthan - Goa Chronicle" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-02-20. பார்க்கப்பட்ட நாள் 2024-03-01.
- ↑ 4.0 4.1 "MLA Chunni Lal Garasiya (MLA), Minister Govt. of Rajasthan, Chunni Lal Garasiya - MLA". Rajasthan Link (in English). பார்க்கப்பட்ட நாள் 2024-03-01.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ PTI (2024-02-12). "BJP fields ex-minister Chunnilal Garasiya, ex-MLA Madan Rathore for RS polls in Rajasthan". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-01.