சன்யாசி சம்சாரி (1942 திரைப்படம்)

சன்யாசி சம்சாரி என்பது 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம்.

சன்யாசி சம்சாரி
இயக்கம்எம். கிருஷ்ணரத்தினம்
தயாரிப்புயூப்பிட்டர் பிலிம்ஸ்
கதைகாவை சதாசிவம்
இசைநடராஜ ஆச்சாரி
நடிப்புகாவை சதாசிவம், பி. டி. ராம், புதுக்கோட்டை எஸ். ருக்மணி, விகடகவி மாரியப்பா, டி. கே. ரஞ்சிதம், கே. வரலட்சுமி, கே. ராஜலட்சுமி, டி. ஏ. ராஜேசுவரி, எம். நடனம், டி. எஸ். லோகநாதன், பி. எஸ். பி. தொண்டைமான்
வெளியீடு1942
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சம்சாரி என்ற இத்திரைப்படமும், சன்யாசி என்ற திரைப்படமும் ஒன்று சேர்க்கப்பட்டு சன்யாசி-சம்சாரி என்ற ஒரு தொகுப்பாக வெளிவந்தன.[1] புதுக்கோட்டையைச் சேர்ந்த யூபிட்டர் பிலிம்சு என்ற நிறுவனம் இதனைத் தயாரித்தது.[1] சம்சாரி திரைக்கதையை காவை சதாசிவம் என்பவர் எழுதினார். அவரே முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார்.[1] நடராஜ ஆச்சாரி இசையமைத்த இத்திரைப்படத்தை எம். கிருஷ்ணரத்தினம் இயக்கியிருந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 ராண்டார் கை (22 ஆகத்து 2015). "Sanyasi-Samsari (1942)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)