சப்தகாதை என்னும் தமிழ் நூல் 14ஆம் நூற்றாண்டில் விளாஞ்சோலைப்பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. ’சப்த’ என்றால் ஏழு. இந்த நூல் காப்புப்பாடல் ஒன்றும் செய்திப்பாடல் ஏழும் கொண்டது. எட்டுப் பாடல்களும் வெண்பாக்கள்.

விளாஞ்சோலைப்பிள்ளை தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர். திருவனந்தபுரத்தில் வாழ்ந்துவந்தார். திருவனந்தபுரம் பெருமாள் கோயிலுக்குள் இவரால் செல்ல முடியவில்லை. விளாஞ்சோலை ஒன்றில் வாழ்ந்துவந்தார். எனவே இவரை விளாஞ்சோலைப்பிள்ளை என்றே குறிப்பிட்டனர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. பாடல்களில் இவர் தன் ஆசிரியரைப் போற்றுகிறார். இவரது ஆசிரியர் உலகாசிரியன் என்னும் பிள்ளை லோகாசாரியார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் உபதேசம் பெற்றவர்.

தென்கலை வைணவர் இந்த நூலின் முதல் பாடலை நாள்தோறும் பாடி [1] வழிபட்டனர். அந்தப் பாடல்:

அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவம்என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டும்
அவனன்றோ ஆசா ரியன்.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

  1. நித்தியானுசந்தம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்தகாதை&oldid=3056644" இலிருந்து மீள்விக்கப்பட்டது