சப்த மங்கை தலங்கள்

சப்தமங்கைத் தலங்கள் திருச்சக்கராப்பள்ளி, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை ஆகியனவாகும்.[1] இக்கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ளன.

திருவையாறு சப்தஸ்தானம் புகழ்பெற்றது எனினும் குடந்தை, கரந்தை, தஞ்சாவூர், திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானங்களும் தனிச்சிறப்புடையவை. திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலங்கள் சப்தமங்கையரோடு தொடர்புடையன என்பதால் சப்தஸ்தான விழா எனப்படும் ஏழூர்த் திருவிழா இப்பகுதியில் கூடுதல் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஏழுர்த்தலங்களும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பதும் அதற்கான கல்வெட்டுச் சான்றுகளுடன் உள்ளன என்பதும் சிறப்பான செய்தி.[2] முதலும் முடிவும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்றவை. அனைத்துமே காவிரியின் தென்கரைத் தலங்கள். ஏழூர்த் திருவிழா இங்கே இரு நாள்கள் முழுமையாக நடைபெறுகின்றன. பங்குனித் திருவிழாவின்போது அனவித்ய நாதசர்மாவுடன் ஏழூர் வலம் வந்தால் சப்தமங்கையின் அருள் பெற்று சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.[2]

சப்தமங்கைத் தலங்களின் இறைவன், இறைவி

தொகு
  • திருச்சக்கராப்பள்ளி - சக்கரவாகேசுவரர், தேவநாயகி
  • அரியமங்கை - ஹரிமுக்தீஸ்வரர், ஞானாம்பிகை
  • சூலமங்கை - கிருத்திவாகேஸ்வரர், அலங்காரவல்லி
  • நந்திமங்கை - ஜம்புகேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி
  • பசுமங்கை - பசுபதீஸ்வரர், பால்வளைநாயகி
  • தாழமங்கை - சந்திரமௌலீஸ்வரர், ராஜராஜேஸ்வரி
  • புள்ளமங்கை - ஆலங்துறைநாதர், சௌந்தரநாயகி

போற்றிய மங்கைகள்

தொகு
  • திருச்சக்கராப்பள்ளி - பிரம்மனது சக்தி வடிவமான பிராமி, பிரம்மனது சாபம் நீங்க வழிபட்ட தலம்.
  • அரியமங்கை - மகேஸ்வரனுடைய (சிவன்) சக்தியான மகேஸ்வரி பூஜித்த தலம் ஹரிமங்கை எனப்படும் அரியமங்கை.
  • சூலமங்கை - முருகனுடைய சக்தியான கௌமாரி பூஜித்த தலம் சூலமங்கலம் எனப்படும் சூலமங்கை.
  • நந்திமங்கை - மகாவிஷ்ணுவுடைய சக்தியான வைஷ்ணவி தலம் நல்லிச்சேரி எனப்படும் நந்திமங்கை.
  • பசுமங்கை - வராகி அம்மன் பூசித்த தலம் பசுபதிகோயில் எனப்படும் பசுமங்கை.
  • தாழமங்கை - இந்திரனின் சக்தியான இந்திராணி வழிபட்ட தலம் தாழமங்கலம் எனப்படும் தாழமங்கை.
  • புள்ளமங்கை - சாமுண்டி வழிபட்ட தலம் புள்ளமங்கலம் எனப்படும் எனப்படும் புள்ளமங்கை.

மேற்கோள்கள்

தொகு
  1. Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011
  2. 2.0 2.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்த_மங்கை_தலங்கள்&oldid=1832946" இலிருந்து மீள்விக்கப்பட்டது