சமசுகிருதப் புத்துயிர்ப்பு

சமசுகிருதப் புத்துயிர்ப்பு என்பது சமசுகிருத மொழியை மீண்டும் பேசவும், அன்றாடம் பயன்படுத்தவும் எடுக்கப்படும் பல்வேறு முயற்சிகளைச் சுட்டுகிறது. இந்திய அரசாலும், பல்வேறு இலாப நோக்கமற்ற அமைப்புகளாலும், சமய நிறுவனங்களாலும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2001 புள்ளி விபரங்களின் படி சமசுகிருத்தை முதன்மொழியாக 14,135 பேர் கொண்டுள்ளார்கள்.

வரலாறு

தொகு

சமசுகிருத மொழிக்கு 3500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட செழுமையான வரலாறு உண்டு. இம் மொழியிலேயே இந்து, பெளத்த, சமண ஆகிய இந்திய சமயங்களின் சமய நூல்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன. சமசுகிருதம் இரட்டை மொழி வழக்கு உடையது. பேச்சு வழக்கு மொழியான பிராகிருதம் காலப் போக்கில் மருபி, சமசுகிருததுடன் தொடர்பு குன்றிப் போயிற்று. இதனால் கிபி 3-5 ம் நூற்றாண்டுகளில் இருந்து சமசுகிருதம் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமணர் அல்லாதோர் சமசுகிருத மொழியைப் கற்க, பயன்படுத்த பல்வேறு தடைகள் இருந்தன என்பதும் சமசுகிருதம் மக்கள் வழக்கில் இருந்து அற்றுப் போக ஒரு காரணம் ஆகும். எனினும் இந்தியாவில் புலைமைசார் இடையே சமசுகிருதமே தொடர்பு மொழியாக இருந்தது. பெரும்பாலான இந்து சமயச் சடங்குகள் இந்த மொழியிலேயே நடத்தப்பட்டன.

ஐரோப்பியர்களின் புத்துயிர்ப்பாக்கம்

தொகு

இந்தியாவை ஐரோப்பியர் ஆக்கிரமிக்கத் தொடங்கிய 17ம் நூற்றாண்டு தொடக்கம், ஐரோப்பியர்கள் சமசுகிருத மொழியை ஆய்வுக்கு உட்படுத்தினர். சமசுகிருத மொழிக்கும், பல்வேறு ஐரோப்பிய மொழிகளுக்கும் இருக்கும் தொடர்பு அறியப்பட்டது. இந்திய-ஐரோப்பிய மொழிகள் என்ற குடும்பத்துக்குள் பல்வேறு இந்திய, ஐரோப்பிய மொழிகள் அடங்கலாயின. மாகசு முல்லர், ஆர்த்தர் சொபென்கவர், கென்றி டேவிட் தூரோ, சே. இராபர்ட் ஓப்பன்கீமர் போன்ற பல்வேறு சிறந்த அறிஞர்கள் சமசுகிருததை கற்றனர். வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பல்வேறு சமய நூல்களை ஐரோப்பிய மொழிகளுக்கு மொழி பெயர்ப்புச் செய்தனர். ஐரோப்பிய ஆட்சியாளர்களும் இந்தியாவின் உயர் வர்க்கத்தின் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினர்.

இவ்வாறான ஆர்வத்தின் நீட்சியாக பிரம்மஞான சபையினரால் அமெரிக்க ஆசிய மற்றும் சமசுகிருத புத்தியிர்ப்பு ஒன்றியம் (American Asiatic and Sanskrit Revival Society) 1894 ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு