ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்

(ஜெ. இராபர்ட் ஓப்பன்ஹீமர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர் (J. Robert Oppenheimer, 22 ஏப்ரல் 1904 – 18 பிப்ரவரி 1967)[1] ஓர் அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் மன்காட்டன் செயல்திட்டத்தின் இலாசு அலமோசு ஆய்வுகூடத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார். இவர் "அணு ஆயுதங்களின் தந்தை" என அறியப்படுகிறார்.[2][3][4]

ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்
J. Robert Oppenheimer
ஓப்பன்கைமர், அண். 1944
பிறப்புயூலியசு இராபர்ட் ஓப்பன்கைமர்
(1904-04-22)ஏப்ரல் 22, 1904
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 18, 1967(1967-02-18) (அகவை 62)
பிரின்ஸ்டன், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்
கல்வி
ஆய்வேடுதொடர்ச்சியான நிறமாலையின் குவாண்டம் கோட்பாடு (1927)
ஆய்வு நெறியாளர்மாக்ஸ் போர்ன்
அறியப்படுவது
  • அணுக்கரு ஆயுதங்கள்
  • ஓப்பன்கைமர்–சினைடர் மாதிரி
  • டோல்மேன்–ஓப்பன்கைமர்–வோல்க்கோஃவ் சமன்பாடு
  • டோல்மேன்–ஓப்பன்கைமர்–வோல்க்கோஃவ் வரம்பு
  • ஓப்பன்கைமர்–பிலிப்சு செயல்முறை
  • போர்ன்–ஓப்பன்கைமர் தோராயம்
விருதுகள்
  • தகுதிக்கான பதக்கம் (1946)
  • என்றிக்கோ பெர்மி விருது (1963)
துணைவர்
கேத்தரின் பியூனிங் (தி. 1940)
பிள்ளைகள்2
கையொப்பம்

நியூயார்க்கு நகரத்தில் பிறந்த ஓப்பன்கைமர் 1925 இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1927 இல் செருமனியில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மாக்சு போர்னின் கீழ் பயின்று, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார். வேறு பல கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் இயற்பியல் பிரிவில் பணியாற்றி, 1936 இல் பேராசிரியரானார். இவர் கோட்பாட்டு இயற்பியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார், குறிப்பாக குவாண்டம் இயங்கியல், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று அலை இயக்கங்களில் போர்ன்–ஓப்பன்கைமர் தோராயம்,[5] எதிர்மின்னிகள், பாசிட்ரான்களின் கோட்பாடுகள்,[6] அணுக்கரு இணைவில் ஓப்பன்கைமர்-பிலிப்சு செயல்முறை,[7] புரை ஊடுருவு மின்னோட்டம் ஆகியவற்றில் இவர் பெரும் பங்காற்றினார். தனது மாணவர்களுடன், நொதுமி விண்மீன்s and கருந்துளைs, குவாண்டம் புலக்கோட்பாடு, அண்டக் கதிர்களின் தொடர்புகளின் கோட்பாடு ஆகியவற்றிற்கும் பங்களிப்பு செய்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. எஆசு:10.1098/rsbm.1968.0016
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand reprinted as Hans Bethe (1997). "J. Robert Oppenheimer 1904-1967". Biographical Memoirs (Washington, D.C.: United States National Academy of Sciences) 71: 175–218. http://books.nap.edu/openbook.php?record_id=5737&page=175. 
  2. "Enrico Fermi Dead at 53; Architect of Atomic Bomb". த நியூயார்க் டைம்ஸ். November 29, 1954. http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0929.html. பார்த்த நாள்: ஆகத்து 8, 2010. 
  3. Lichello 1971
  4. Bird & Sherwin 2005, ப. xi
  5. Cassidy 2005, ப. 112
  6. Pais 2006, ப. 33
  7. Cassidy 2005, ப. 173
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._இராபர்ட்_ஓப்பன்கைமர்&oldid=3894386" இலிருந்து மீள்விக்கப்பட்டது