சமணம் வளர்த்த தமிழ்

சமணம் வளர்த்த தமிழ் என்பது சமயக் கருத்துக்களைப் பரப்ப சமணர்கள் தமிழைக் கருவியாக கைக்கொண்டனரென்பதை குறிக்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையி்ல் தமிழகத்தில் சமண சமயம் சிறந்து விளங்கியது.

இலக்கியங்கள் தொகு

சமணர்கள் புது வகையான இலக்கியங்களையும் அறநூல்களையும் இயற்றினர். சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும் ஐம்பெரும் காப்பியங்களில் இடம்பெறும் நூல்கள் இவ்விரு நூல்களும் இளங்கோ அடிகள். திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டன. காவியப் பண்புகளெல்லாம் ஒருங்கே பெற்ற சீவகசிந்தாமணி ஐம்பெரும் காப்பியங்களின் வாிசையில் சிறப்பிடம் பெறுகின்றது. பிற சமயத்தாரும் இந்நூல்களை பொிதும் பாராட்டுகின்றனர். சைவராக கருதப்பெறும் நச்சினார்க்கினியர் உரை எழுதி உள்ளார். சமயம் கடந்த காவிய நயம் பெற்ற நூல் என்பதற்கு இதுவே சான்று. சூளாமணி, வளையாபதி, யசோதர காவியம், நீலகேசி, உதயணன் கதை, மேரு மந்திரப் புராணம், திருக்கலம்பகம், திருநூற்று அந்தாதி ஆகியனவும் சமணர்கள் இயற்றிய நூல்கள் ஆகும்.[1][2]

நீதி நூல்கள் தொகு

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி நாலடியாரையும் திருக்குறளையும் உணர்த்தும். நான்மணிக் கடிகை பழமொழி ஏலாதி ஆகிய நூல்கள் சமணர்களால் இயற்றப்பட்டவை.[1][2]

இலக்கண நூல்கள் தொகு

முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்றிய ஆசிாியர் சமணர் என்று கூறும் வழக்கம் உண்டு. யாப்பெருங்கலம், யாப்பருங்கலக்காாிகை என்ற யாப்பிலக்கண நூல்களும் அவற்றின் உரை நூல்களும் சமணர்களால் எழுதப்பெற்றவை. நேமிநாதம் என்ற இலக்கண நூலும் சமணர் இயற்றியதே. பொருள் இலக்கணத்தை பற்றிய அகப்பொருள் விளக்கம் என்ற நூலும் சமணர்களால் இயற்றப்பட்டதே.[1][2]

நிகண்டுகள் தொகு

சொற்களின் பொருள்களை அறிய துணைபுாியும் நிகண்டுகளை முதன்முதலில் இயற்றிய பெருமை சமணர்களையே சாரும். சூடாமணி நிகண்டை இயற்றிய மண்டல புருடர் சமண முனிவரே. திவாகரத்தை திவாகரர் என்ற சமண முனிவரும், பிங்கலந்தையை அவருடைய மகன் பிங்கலரும் இயற்றினர்.[2]

கேசி நூல்கள் தொகு

ஐஞ்சிறு காப்பியங்களுள் குண்டலகேசி என்னும் நூலுக்கு எதிராக நீலகேசி என்னும் நூல் சமணர்களால் இயற்றப்பட்டது.[2]

பிற நூல்கள் தொகு

எலி விருத்தம், கிளி விருத்தம், சாந்தி புராணம், நாரதசாிதை, மல்லிநாதர் புராணம் ஆகியன சமண முனிவர்களால் இயற்றப்படடன. ஸ்ரீபுராணமும், கந்தய சிந்தாமணியும் சமணர் இயற்றிய உரைநடை நூல்களாகும்.[2]

உசாத்துணை நூல் தொகு

பன்முக நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ஆசிாியர் முனைவர்.கா.வாசுதேவன்

  1. 1.0 1.1 1.2 "தமிழகத்தில் சமணம்". இரா. பானுகுமார், சென்னை. தமிழ் மரபு அறகட்டளை. செப்டம்பர் 11, 2017. Archived from the original on 2019-07-20. பார்க்கப்பட்ட நாள் மே 16, 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 தமிழ் இலக்கிய வரலாறு (1998- 27 ஆம் பதிப்பு). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: மணமலர்ப் பதிப்பகம், சென்னை. பக். 138-139. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.pdf/140. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமணம்_வளர்த்த_தமிழ்&oldid=3552979" இலிருந்து மீள்விக்கப்பட்டது