சமரேந்திரநாத் ராய்
சமேரேந்திர நாத் ராய் (Samarendra Nath Roy) (பிறப்பு:11 டிசம்பர் 1906: இறப்பு: 23 சூலை 1964) ஐக்கிய அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வங்காள கணிதவியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ஆவார். பன்முக பகுப்பாய்விற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
சமரேந்திரநாத் ராய் | |
---|---|
இயற்பெயர் | সমরেন্দ্রনাথ রায় |
பிறப்பு | கொல்கத்தா, பிரித்தானிய இந்தியா | 11 திசம்பர் 1906
இறப்பு | 23 சூலை 1964 ஜாஸ்பெர், ஆல்பர்ட்டா கனடா | (அகவை 57)
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
துறை | கணிதவியாலாளர் மற்றும் புள்ளியியலாளர் |
பணியிடங்கள் | கொல்கத்தா பல்கலைக்கழகம் இந்தியப் புள்ளியியல் கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) |
கல்வி கற்ற இடங்கள் | ராஜாபஜார் அறிவியல் கல்லூரி (கொல்கத்தா பல்கலைக்கழகம்) |
ஆய்வு நெறியாளர் | பிரசந்தா சந்திரா மகாலனோபிசு என். ஆர். சென் |
முனைவர் பட்ட மாணவர்கள் | இன்கிராம் ஒல்கின் |
அறியப்படுவது | பன்முக பகுப்பாய்வு |
கல்வி & பணி
தொகுஇவர் 1931ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராஜா பஜார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு கணிதவியலில் இளநிலை அறிவியியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைவரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசுவின் கீழ் புள்ளியியலில், பன்முக பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][3]
சமேரேந்திரநாத் ராய் 1950 முதல் 1963 முடிய வடகரோலினா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் இந்தியா திரும்பி இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியாகச் சேர்ந்தார்.
குறிப்பிடத்தக்க படைப்புகள்
தொகு- Potthoff, R. F. and Roy, S. N. (1964), "A generalized multivariate analysis of variance model useful especially for growth curve problems", Biometrika, vol. 51, pp. 313–326.
- Roy, S. N. (1957), "Some Aspects of Multivariate Analysis", New York: Wiley.
- Roy, S. N. and Sarhan, A. E. (1956), "On inverting a class of patterned matrices", Biometrika, 43, 227–231.
மேற்கோள்கள்
தொகு- ↑ Govind S. Mudholkar; Alan D. Hutsonb; Michael P. McDermotta (2007). "Life and legacy of Samarendra Nath Roy 1906–1964". Journal of Statistical Planning and Inference 137 (11): 3208–3212. doi:10.1016/j.jspi.2007.03.003.
- ↑ V. Mardia, Kanti (23 January 2008). "On S.N. Roy's Legacy to Multivariate Analysis" (PDF). Presented as a plenary talk to S. N. Roy Multivariate Conference, Kolkata (December 2006). Archived from the original (PDF) on 29 July 2012. பார்க்கப்பட்ட நாள் 26 October 2012.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் சமரேந்திரநாத் ராய்
- ↑ "PhDs Awarded". Department of Statistics and Operations Research, University of North Carolina at Chapel Hill. Archived from the original on 24 January 2018. பார்க்கப்பட்ட நாள் 21 January 2013.