சமாஜ்வாதி கட்சி

இந்திய அரசியல் கட்சி
(சமாச்வாதி கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமாஜ்வாதி கட்சி (Samajwadi Party) இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

சமாஜ்வாதி கட்சி
தலைவர்அகிலேசு யாதவ்
நிறுவனர்முலாயம் சிங் யாதவ்
மக்களவைத் தலைவர்அகிலேசு யாதவ்
மாநிலங்களவைத் தலைவர்இராம் கோபால் யாதவ்
தொடக்கம்அக்டோபர் 4, 1992
தலைமையகம்18 காபர்னிசசு லேன், புது தில்லி
கொள்கைபரப்புவாதம், மக்களாட்சி சமத்துவம்
அரசியல் நிலைப்பாடுஇடதும் வலதும் அல்லாத நடுநிலை
நிறங்கள்சிவப்பு  
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[1]
கூட்டணிமூன்றாவது அணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
37 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
4 / 245
தேர்தல் சின்னம்
Samajwadi Party symbol
இணையதளம்
Official Website
இந்தியா அரசியல்

கட்சி அங்கீகாரம்

தொகு

இந்த கட்சி உத்திரப்பிரதேசம், உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்காக ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது.[2][3] சனவரி 16 , 2017 அ்ன்று இந்தியத் தேர்தல் ஆணையம் அகிலேசு தலைமையிலான குழுவே உண்மையான சமாச்வாதி கட்சி எனவும் அதற்கே சைக்கிள் எனவும் அறிவித்துள்ளது.[4]

தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமும் சைக்கிள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.
  2. தேர்தல் ஆணையத்தின் ஆணை
  3. "தட்ஸ்தமிழ் செய்தி". Archived from the original on 2010-08-02. பார்க்கப்பட்ட நாள் 2010-07-31.
  4. "After winning 'cycle' symbol, Akhilesh Yadav meets Mulayam Singh". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2017.

வெளி இணைப்பு

தொகு

சமாஜ்வாதி கட்சி இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாஜ்வாதி_கட்சி&oldid=4064179" இலிருந்து மீள்விக்கப்பட்டது