சமானப் பகுதி
கணிதத்தில் ஒரு கணமும் அக்கணத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு சமான உறவும் தரப்பட்டால், அக்கணத்தின் ஏதேனும் ஒரு உறுப்பு a இன் சமானப் பகுதி (Equivalence class)என்பது அக்கணத்தில் a -க்குச் சமானமான உறுப்புகள் அனைத்தையும் கொண்ட உட்கணமாகும்.
குறியீடும் வரையறையும்
தொகுஒரு கணம் X இன் மீது வரையறுக்கப்பட்ட சமான உறவு ~ எனில் அக்கணத்தின் ஏதேனுமொரு உறுப்பு a இன் சமானப் பகுதி எனக் குறிக்கப்படுகிறது. a உடன் இச்சமான உறவால் இணைப்புடைய X கணத்தின் உறுப்புகள் அடங்கிய கணம் a இன் சமானப் பகுதியென வரையறுக்கப்படுகிறது. இது X இன் உட்கணமாக இருக்கும்.
a இன் சமானப் பகுதி:
a இன் சமானப் பகுதி எனவும் குறிக்கப்படுகிறது. இங்கு R என்பது சமான உறவு. இது a இன் R-சமானப்பகுதி.
~ சமான உறவைப் பொறுத்து, கணம் X இன் அனைத்து சமானப் பகுதிகளையும் அடக்கிய கணமானது, X இன் காரணி கணம் அல்லது ஈவு கணம் (quotient set) என அழைக்கப்படுகிறது. இதன் குறியீடு:
- .
கணத்தின் ஒவ்வொரு உறுப்பையும் அதன் சமானப் பகுதியுடன் இணைக்கும் நியமன வீழல் கோப்பு' (canonical projection map) ஒன்று ஒவ்வொரு சமான உறவுக்கும் உண்டு. அக்கோப்பு (π) X இலிருந்து X/~ -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு முழுக்கோப்பாகும்:
எடுத்துக்காட்டுகள்
தொகு- கார்களின் கணத்தில் சமான உறவாக (~) ஒரே நிறத்திலுள்ள கார்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு சமானப் பகுதியும் பச்சை, ஊதா, சிவப்பு, மஞ்சள்... என ஒரே நிறத்தில் அமைந்த கார்களைக் கொண்ட கணமாக இருக்கும். மொத்த சமானப் பகுதிகளின் எண்ணிக்கை மூல கணத்திலுள்ள கார்களின் மொத்த நிறங்களின் எண்ணிக்கையாகும்.
- Z -முழு எண்கள் கணத்தில் மாடுலோ 2 எனும் சமான உறவின் சமானப் பகுதிகள் இரட்டை முழுஎண்களின் கணமும், ஒற்றை முழுஎண்களின் கணமும் ஆகும்.
- X என்பது இரண்டாவது எண்ணைப் பூச்சியமற்றதாகக் கொண்ட முழு எண்கள் வரிசைச் சோடிகளின் கணம்; இக்கணத்தில் சமான உறவு ~ பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
- என இருந்தால், இருந்தால் மட்டுமே,
இப்பொழுது வரிசைச் சோடி (a,b) இன் சமானப் பகுதி விகிதமுறு எண் . இந்த சமான உறவையும் சமானப் பகுதியையும் கொண்டு விகிதமுறு எண்களின் கணத்தை வரையறுக்கலாம்.
பண்புகள்
தொகுX கணத்தின் ஒவ்வொரு உறுப்பு x -ம் அதன் சமானப்பகுதி [x] இன் ஒரு உறுப்பாகும். X கணத்தின் எந்த இரு சமானப் பகுதிகளும் ஒன்று சமமாக இருக்கும் அல்லது சேர்ப்பில்லாக் கணங்களாக இருக்கும். X கணத்தின் அனைத்து சமானப் பகுதிகளும் சேர்ந்து X இன் பிரிவினையாக அமையும்:
X இன் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு சமானப் பகுதியில் மட்டுமே இருக்கும். மறுதலையாக X இன் ஒவ்வொரு பிரிவும் ஒரு சமான உறவின் மூலம் கிடைக்கிறது. எனவே:
x , y எனும் இரு உறுப்புகள் கணத்தின் ஒரே பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், இருந்தால் மட்டுமே x ~ y ஆக இருக்க முடியும். அதாவது:
- x ~ y ⇔ [x] = [y].
கணம் X இன் மீது வரையறுக்கப்பட்ட சமான உறவு ~ , x , y கணத்தின் இரு உறுப்புகள் எனில் பின்வரும் மூன்று கூற்றுகளும் சமானமானவை:
- .