சமாரியம் அசிட்டைலசிட்டோனேட்டு
வேதிச் சேர்மம்
சமாரியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Samarium acetylacetonate) என்பது Sm(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமான இதை சுருக்கமாக Sm(acac)3 என்ற வாய்ப்பாட்டாலும் குறிப்பிடுவர். குளோரோஃபார்மில் உள்ள என்-புரோமோசக்சினிமைடுடன் வினைபுரிந்து வெளிர் மஞ்சள் நிற Sm(Br-acac)3 சேர்மத்தை கொடுக்கிறது. (இங்குள்ள Br-acac என்பது 3-புரோமோ-2,4-பெண்டேன் டையோன் ஈந்தணைவியாகும்).[1] டைமெத்தில்சல்பாக்சைடில் உள்ள இதன் நீரேற்றை மீள்படிகமாக்கம் செய்து Sm(acac)3·2DMSO·H2O என்ற நீரேற்றைப் பெறலாம்.[2] இது டைகோபால்ட் ஆக்டாகார்பனைலுடன் வினைபுரிந்து SmCo5 சேர்மத்தை தயாரிக்கப் பயன்படுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
14589-42-5 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C15H21O6Sm | |
வாய்ப்பாட்டு எடை | 447.69 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gopalan Shankar, Suthamalli K. Ramalingam (1984). "Phenylisocyanation and bromination studies on lanthanide ?-diketonates" (in en). Transition Metal Chemistry 9 (12): 449–453. doi:10.1007/BF00620675. பன்னாட்டுத் தர தொடர் எண்:0340-4285. http://link.springer.com/10.1007/BF00620675. பார்த்த நாள்: 2021-09-20.
- ↑ Dzyubenko, N. G.; Kalenichenko, Yu. V.; Martynenko, L. I. Rare earth tris(acetylacetonate) adducts with DMSO(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1988. 33 (1): 52-58.
- ↑ Hongwei Gu, Bing Xu, Jiancun Rao, R. K. Zheng, X. X. Zhang, K. K. Fung, Catherine Y. C. Wong (2003-05-15). "Chemical synthesis of narrowly dispersed SmCo5 nanoparticles" (in en). Journal of Applied Physics 93 (10): 7589–7591. doi:10.1063/1.1537697. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8979. Bibcode: 2003JAP....93.7589G. http://aip.scitation.org/doi/10.1063/1.1537697. பார்த்த நாள்: 2021-09-20.